» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்திற்கு சிறப்பு தேர்தல் அதிகாரி நியமனம்!

புதன் 22, பிப்ரவரி 2012 6:47:30 PM (IST)

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெறும் இடைத்தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 12 கிராமங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க சிறப்பு தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். 

சங்கரன்கோவில் சட்டசபை தொகுதியில், இடைத்தேர்தல் வரும் மார்ச் 18ம் தேதி நடைபெறுகிறது. இத்தொகுதியில் தூத்துக்குடி மாவட்டம் இளையரசனேந்தல் பிர்காவிற்குட்பட்ட இளையரனேந்தல், முக்கூட்டுமலை, புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பநேரி, அய்யநேரி, நக்கல முத்தன்பட்டி, வடக்குப்பட்டி, பிச்சைத் தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், லட்சுமி அம்மாள்புரம், ஜமீன் தேவர்குளம் ஆகிய 12 கிராமங்கள் உள்ளன. 

இங்கு, தேர்தல் நடத்தை விதிமுறைகள், சட்டம் ஒழுங்கு கண்காணிக்கவும், சிறப்பு மாஜிஸ்திரேட்டாக, கோவில்பட்டி தாலுகாவில் அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கும் திட்ட துணை தாசில்தார் முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். 


மக்கள் கருத்து


ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads














Thoothukudi Business Directory