» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்ட் 8-ல் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 4:49:31 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 8ஆம் தேதி விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஊரகக் கோட்டத்திற்குட்பட்ட உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், வருகிற 08.08.2026 (சனிக்கிழமை) அன்று காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் செயற்பொறியாளர் சின்னத்துரை அறிவித்துள்ளார்.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:
1. விளாத்திகுளம் உபமின் நிலையம்:
விளாத்திகுளம், மந்திகுளம், செங்கல்படை, கமலாபுரம், பிள்ளையார்நத்தம், பேரிலோவன்பட்டி, அயன்பொம்மையாபுரம், ராமசந்திராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்கள்.
2. குளத்தூர் உபமின் நிலையம்:
குளத்தூர், கீழவைப்பார், வைப்பார், வேப்பலோடை, மார்த்தாண்டம்பட்டி, முள்ளூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்கள்.
3. சூரங்குடி உபமின் நிலையம்:
மேல்மாந்தை, ஈ.வேலாயுதபுரம், வேம்பார், பச்சையாபுரம், அரியநாயகிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி) வரை மின் விநியோகம் இருக்காது.
எனவே, பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இந்த மின்நிறுத்த அறிவிப்பைக் கருத்தில் கொண்டு தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுதா கருத்தரித்தல் மையம் சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்: ஆக.13, 14ல் நடைபெறுகிறது!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:35:31 PM (IST)

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:06:03 PM (IST)

மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2பேர் பரிதாப சாவு
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:30:22 AM (IST)

தூத்துக்குடி குடிநீர் பிரச்னையில் அமைச்சர் மவுனம் ஏன்? — பாஜக சராமாரி கேள்வி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:11:16 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:02:45 AM (IST)

டி.எம்.பி. அறக்கட்டளை சார்பில் 30 பேருக்கு இலவச டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 சிறப்புப் பயிற்சி!
புதன் 12, ஆகஸ்ட் 2026 10:08:10 AM (IST)








