» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் நகராட்சியில் கழிவுநீர் அகற்றும் பணிகள்: ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 4:20:45 PM (IST)

திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீரை அகற்றும் பணிகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக் கூட்டத்திற்கு முன்னதாக, திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட கடற்கரை ரோடு நுழைவு வாயில் பகுதியில் கழிவுநீரை வாகனங்கள் மூலம் விரைவாக வெளியேற்றும் பணிகளைப் பார்வையிட்டார். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் உள்ள 'முருகன் விடுதி' கழிவுநீர் தொட்டியின் பராமரிப்பு மற்றும் திருக்கோவில் வளாகக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.
தோப்பூர் பகுதியில் இயங்கி வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். திருச்செந்தூர் அரசு மருத்துவமனை அருகே சாலையோரங்களில் கழிவுநீர் தேங்குவதைத் தடுத்து, அதை முறையாகச் சீரமைப்பது குறித்து ஆய்வு செய்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
கள ஆய்வைத் தொடர்ந்து, திருச்செந்தூர் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நகராட்சிப் பகுதிகளில் கழிவுநீர் தங்கு தடையின்றி வெளியேறவும், சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படாமல் தடுக்கவும் மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் ரா. கௌதம், மண்டலப் பொறியாளர் சணல் குமார், நகராட்சி ஆணையாளர் ஈழவேந்தன், நகராட்சிப் பொறியாளர் சரவணன், வட்டாட்சியர் தங்கமாரி மற்றும் அரசுத் துறை சார்ந்த பல்வேறு அலுவலர்கள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுதா கருத்தரித்தல் மையம் சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்: ஆக.13, 14ல் நடைபெறுகிறது!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:35:31 PM (IST)

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:06:03 PM (IST)

மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2பேர் பரிதாப சாவு
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:30:22 AM (IST)

தூத்துக்குடி குடிநீர் பிரச்னையில் அமைச்சர் மவுனம் ஏன்? — பாஜக சராமாரி கேள்வி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:11:16 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:02:45 AM (IST)

டி.எம்.பி. அறக்கட்டளை சார்பில் 30 பேருக்கு இலவச டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 சிறப்புப் பயிற்சி!
புதன் 12, ஆகஸ்ட் 2026 10:08:10 AM (IST)








