» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் : பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 3:36:32 PM (IST)

தூத்துக்குடியில் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளதால் துறைமுகத்திற்குள் லாரிகள் செல்லாததால் பல கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
புதிய வாடகை ஒப்பந்தம், வாடகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் துறைமுகத்திற்குள் லாரிகள் செல்லாததால் பல கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
புதிய வாடகை ஒப்பந்த அடிப்படையில் வாடகையை உயர்த்திக் வழங்க வேண்டும். வெளியூர்களுக்கு லோடு ஏற்றிச் செல்லும்போது வாடகைத் தொகையில் 30% முன்பணமாக வழங்கப்பட வேண்டும். வாடகை பில் சமர்ப்பித்த 15 நாட்களுக்குள் தொகைப் பட்டுவாடா செய்யப்பட வேண்டும். கண்டெய்னர் யார்டுகளுக்கு லாரிகள் வந்தவுடன் உடனடியாகச் சரக்குகளை இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
CFS குடோன்களில் கண்டெய்னர் பெட்டிகளை ஏற்றவும் இறக்கவும் மாமூல் வசூலிப்பதைத் தடுக்க வேண்டும். தூத்துக்குடி துறைமுகத்திற்குள் நுழையும் லாரிகள், 2 மணி நேரத்திற்குள் 8 மற்றும் 9-வது கப்பல் தளங்களில் கண்டெய்னர்களை ஏற்றி/இறக்கி முடித்து வெளியேற வழிவகை செய்ய வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளது.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், இன்று காலை முதல் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை இயக்காமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாதாரண நாட்களில் தினமும் சுமார் 2,000 கண்டெய்னர் லாரிகள் தூத்துக்குடி துறைமுகத்திற்குச் சரக்குகளை ஏற்றி இறக்கச் சென்று வரும். ஆனால், இந்த வேலைநிறுத்தம் காரணமாக இன்று ஒரு லாரி கூட துறைமுகத்திற்குள் செல்லவில்லை.
இதன் காரணமாகத் துறைமுகத்தில் சரக்குக் கையாளும் பணிகள் முடங்கி, நாளொன்றுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கண்டெய்னர் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் சி.எம். மதியழகன் கூறுகையில்:"எங்களது நியாயமான கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகமும், தூத்துக்குடி துறைமுக சபை நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும். பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை எங்களது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்." எனத் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுதா கருத்தரித்தல் மையம் சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்: ஆக.13, 14ல் நடைபெறுகிறது!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:35:31 PM (IST)

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:06:03 PM (IST)

மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2பேர் பரிதாப சாவு
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:30:22 AM (IST)

தூத்துக்குடி குடிநீர் பிரச்னையில் அமைச்சர் மவுனம் ஏன்? — பாஜக சராமாரி கேள்வி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:11:16 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:02:45 AM (IST)

டி.எம்.பி. அறக்கட்டளை சார்பில் 30 பேருக்கு இலவச டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 சிறப்புப் பயிற்சி!
புதன் 12, ஆகஸ்ட் 2026 10:08:10 AM (IST)








