» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 3:15:17 PM (IST)

தூத்துக்குடி மடத்தூர் மற்றும் குரூஸ்புரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் "எம்பவர் இந்தியா" மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் "உலக தாய்ப்பால் வார விழா" சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த ஆண்டின் உலக தாய்ப்பால் வாரத்தின் கருப்பொருள் "வாழ்க்கையின் நிலையான தொடக்கத்திற்குத் தாய்ப்பால்: சிறப்பாகச் செயல்படும் முறைகளை வலுப்படுத்துதல்" என்பதாகும். இது முன்னேற்றத்தைக் கண்காணித்தல், தாக்கத்தை மதிப்பிடுதல் மற்றும் தாய்ப்பால் ஊட்டுதலின் பலன்களை மேம்படுத்தும் நிருபிக்கப்பட்ட அணுகுமுறைகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
நிகழ்ச்சியில் எம்பவர் இந்தியா அமைப்பின் நிர்வாக இயக்குனர் ஏ. சங்கர் சிறப்புரையாற்றி, தாய்ப்பால் ஊட்டுதலின் முக்கியத்துவம் குறித்து விளக்கியதாவது:"தாய்ப்பால் ஊட்டுவது குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், தாய்மார்களுக்கும் எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது.
இது தாய்மார்களுக்கு மார்பகப் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கிறது. மேலும், செயற்கைப் பால் வாங்கத் தேவையில்லை என்பதால் இது பொருளாதார ரீதியாகவும் பயனளிக்கிறது.
தாய்ப்பால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, அவர்களுக்குத் தேவையான மிகச்சிறந்த ஊட்டச்சத்தை வழங்குகிறது. குழந்தையின் வாழ்க்கையின் முதல் சில மாதங்களுக்குத் தேவையான அனைத்து ஆற்றலையும் ஊட்டச்சத்துக்களையும் தாய்ப்பாலே முழுமையாக வழங்குகிறது.
முதல் ஆண்டின் இரண்டாம் பாதியில் குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளில் பாதியையோ அல்லது அதற்கு மேலோ தாய்ப்பால் பூர்த்தி செய்கிறது. மேலும், இரண்டாவது ஆண்டில் மூன்றில் ஒரு பங்கு தேவையை நிறைவு செய்கிறது." என்று அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவ அதிகாரி டாக்டர் ஜல்சி மற்றும் CDPO ரூபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ அதிகாரி டாக்டர் தினேஷ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியின் நிறைவில், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் "தாய்ப்பால் ஊட்டுதலே சிறந்தது" என்ற தலைப்பிலான விழிப்புணர்வு புத்தகங்கள் வழங்கப்பட்டன. கர்ப்பிணிப் பெண்களும், அவர்களைப் பராமரிப்பவர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுதா கருத்தரித்தல் மையம் சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்: ஆக.13, 14ல் நடைபெறுகிறது!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:35:31 PM (IST)

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:06:03 PM (IST)

மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2பேர் பரிதாப சாவு
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:30:22 AM (IST)

தூத்துக்குடி குடிநீர் பிரச்னையில் அமைச்சர் மவுனம் ஏன்? — பாஜக சராமாரி கேள்வி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:11:16 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:02:45 AM (IST)

டி.எம்.பி. அறக்கட்டளை சார்பில் 30 பேருக்கு இலவச டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 சிறப்புப் பயிற்சி!
புதன் 12, ஆகஸ்ட் 2026 10:08:10 AM (IST)








