» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டிராக்டர் மீது வாகனம் மோதி விபத்து: ஒருவர் பலி!

வியாழன் 6, ஆகஸ்ட் 2026 11:21:47 AM (IST)

கோவில்பட்டி அருகே டிராக்டர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகிலுள்ள விட்டல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி மகன் பெருமாள் (48). அதே கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் ஐயம்பெருமாள் (45). இவர்கள் இருவரும் சிறிய டிராக்டர் வண்டியில் மதுரையிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

இன்று மதுரை - திருநெல்வேலி பைபாஸ் சாலையில், கோவில்பட்டி அருகே உள்ள ஒரு காட்டன் மில் பகுதியில் டிராக்டர் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று டிராக்டர் மீது பலமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் டிராக்டரில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த ஐயம்பெருமாளுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தையும், அதை ஓட்டிச் சென்ற ஓட்டுநரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads









Thoothukudi Business Directory