» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருட்டு வழக்கில் கைதான த.வெ.க. நிர்வாகி நீக்கம்: தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அறிவிப்பு
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 8:08:20 AM (IST)
தூத்துக்குடியில் 1 கோடி சீனப் பட்டாசு திருட்டு வழக்கில் கைதான வழக்கறிஞர் ஜேசுதாஸ் த.வெ.க.விலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக மத்திய மாவட்டச் செயலாளர் எஸ்டிஆர் சாமுவேல்ராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளுக்கும் கட்டுப்பாட்டிற்கும் முரணாகச் செயல்பட்டதாக வழக்கறிஞர் அ. ஜேசுதாஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக நீக்கப்படுவதாகத் தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் சாமுவேல்ராஜ் அறிவித்துள்ளார்.தூத்துக்குடி மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அ. ஜேசுதாஸ் (த/பெ ஆல்பர்ட்), கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இணையதளம் வாயிலாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராகத் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்நிலையில், இவர் கட்சியின் கொள்கைகளுக்கும், கண்ணியத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் முற்றிலும் முரணான வகையில் செயல்பட்டு, கட்சிக்குக் களங்கமும் அவப்பெயரும் ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் அ. ஜேசுதாஸ் ஆகஸ்ட் 3, முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் உடனடியாகவும், முழுமையாகவும் நீக்கப்படுகிறார்.
கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் இனிவரும் காலங்களில் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மக்கள் கருத்து
ஆமாAug 6, 2026 - 01:10:09 PM | Posted IP 162.1*****
மூஞ்சை பார்த்தாலே இளம் வயது கருணாநிதி மாதிரி சிரிப்பா இருக்கே
ஆமாAug 6, 2026 - 01:09:15 PM | Posted IP 104.2*****
இது திமுக வில் பயிற்சி எடுத்து வந்திருப்பான் , அதன் நீக்கிவிட்டதே தப்பு இல்லை. திருட்டு பயலுக பூரா திமுகவில்
BabuAug 4, 2026 - 02:23:33 PM | Posted IP 162.1*****
ithuku than katchila seruvanugala vijay avargaluku ivana mathiri atkalal ketta per varama irukanum
BalaAug 4, 2026 - 10:02:12 AM | Posted IP 172.7*****
avlo ayokkiyanungalum angathaan irukkanunga
மேலும் தொடரும் செய்திகள்

சுதா கருத்தரித்தல் மையம் சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்: ஆக.13, 14ல் நடைபெறுகிறது!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:35:31 PM (IST)

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:06:03 PM (IST)

மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2பேர் பரிதாப சாவு
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:30:22 AM (IST)

தூத்துக்குடி குடிநீர் பிரச்னையில் அமைச்சர் மவுனம் ஏன்? — பாஜக சராமாரி கேள்வி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:11:16 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:02:45 AM (IST)

டி.எம்.பி. அறக்கட்டளை சார்பில் 30 பேருக்கு இலவச டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 சிறப்புப் பயிற்சி!
புதன் 12, ஆகஸ்ட் 2026 10:08:10 AM (IST)









naanAug 7, 2026 - 01:06:31 AM | Posted IP 104.2*****