» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கு: போலீசாருக்கு டிஐஜி திருநாவுக்கரசு பாராட்டு
சனி 18, ஜூலை 2026 3:53:20 PM (IST)
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் 8 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த காவல் துறையினருக்கு நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு பாராட்டுத் தெரிவித்தார்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கஞ்சா கடத்தல் வழக்கில், கடத்தலில் ஈடுபட்ட எதிரிகளைக் கைது செய்து அவர்களிடமிருந்து 8 கிலோ கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்த சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புப் பிரிவினருக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கில் துரிதமாகச் செயல்பட்ட தாளமுத்துநகர் உதவி ஆய்வாளர் ராஜபிரபு, காவலர்கள் டேவிட்ராஜன், சண்முகையா, சுடலைமணி, பொன்ராம் மற்றும் பொன்ராஜ் ஆகியோரைத் திருநெல்வேலி சரக காவல் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்துத் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு நற்சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான இத்தகைய துறைசார்ந்த நடவடிக்கைகள் மற்றும் குற்றத் தடுப்புப் பணிகளைத் தொடர்ந்து தொய்வின்றி மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுதா கருத்தரித்தல் மையம் சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்: ஆக.13, 14ல் நடைபெறுகிறது!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:35:31 PM (IST)

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:06:03 PM (IST)

மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2பேர் பரிதாப சாவு
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:30:22 AM (IST)

தூத்துக்குடி குடிநீர் பிரச்னையில் அமைச்சர் மவுனம் ஏன்? — பாஜக சராமாரி கேள்வி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:11:16 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:02:45 AM (IST)

டி.எம்.பி. அறக்கட்டளை சார்பில் 30 பேருக்கு இலவச டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 சிறப்புப் பயிற்சி!
புதன் 12, ஆகஸ்ட் 2026 10:08:10 AM (IST)








