» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ஆதார் சேவை மையம் : பொதுமக்கள் பயன்பெற அஞ்சல்துறை அழைப்பு!
சனி 18, ஜூலை 2026 3:30:02 PM (IST)
தூத்துக்குடி இரயில் நிலைய தபால் சேவை மையத்தில் புதிய ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவையைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அஞ்சல்துறை அழைப்பு விடுத்துள்ளது.
தூத்துக்குடி இரயில் நிலைய தபால் சேவை மையத்தில் (RMS), கடந்த ஜூலை 7ஆம் தேதி முதல் புதிய ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை மையம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்த மையத்தில் புதிய ஆதார் பதிவு, பெயர், முகவரி, பிறந்த தேதி, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விபரங்களைப் புதுப்பித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், குழந்தைகளுக்கான ஆதார் பதிவு மற்றும் பயோமெட்ரிக் (கைரேகை, கருவிழி, புகைப்படம்) புதுப்பித்தல் உள்ளிட்ட ஆதார் சார்ந்த பல்வேறு சேவைகளும் இங்கு வழங்கப்படுகின்றன.
பொதுமக்கள் தங்களின் அசல் ஆவணங்களுடன் நேரில் சென்று, அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைச் செலுத்தி இச்சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம். தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் தொலைதூரம் செல்ல வேண்டிய அவசியமின்றி, தங்களது ஆதார் விபரங்களை இம்மையத்தில் திருத்தம் செய்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சேவையைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு இரயில்வே தபால் சேவை மையம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுதா கருத்தரித்தல் மையம் சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்: ஆக.13, 14ல் நடைபெறுகிறது!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:35:31 PM (IST)

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:06:03 PM (IST)

மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2பேர் பரிதாப சாவு
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:30:22 AM (IST)

தூத்துக்குடி குடிநீர் பிரச்னையில் அமைச்சர் மவுனம் ஏன்? — பாஜக சராமாரி கேள்வி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:11:16 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:02:45 AM (IST)

டி.எம்.பி. அறக்கட்டளை சார்பில் 30 பேருக்கு இலவச டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 சிறப்புப் பயிற்சி!
புதன் 12, ஆகஸ்ட் 2026 10:08:10 AM (IST)








