» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது!

வெள்ளி 17, ஜூலை 2026 8:04:33 PM (IST)

KanjaRrestJL17.jpg

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் பகுதிகளில் காவல் துறையினர் நடத்திய தீவிரச் சோதனையில் 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துளளனர். 

தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வ.உ.சி நகர் பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காகக் கஞ்சா வைத்திருந்த இருவரைப் பிடித்த தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் கே.டி.சி நகரைச் சேர்ந்த முகேஷ் கண்ணன் (20) மற்றும் பாரதிநகரைச் சேர்ந்த சந்தனசெல்வம் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 8 கிலோ 60 கிராம் கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு:

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் மேரிஜெமிதா தலைமையிலான காவல் துறையினர் தாளமுத்துநகர் டேவிஸ்புரம் சந்திப்புப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முகமதுசதாலிபுரத்தைச் சேர்ந்த வேலு பிரியதர்ஷன் (19), லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த ஜெகதீஸ் (21) ஆகிய இருவரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து 500 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

சிப்காட் போலீசார் 

kanjarrestJL17A.jpg

சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் காவுராஜன், தனசேகரன்நகர் பூங்கா அருகில் நடத்திய கண்காணிப்புப் பணியின் போது சட்டவிரோதமாகக் கஞ்சா வைத்திருந்த டூவிபுரத்தைச் சேர்ந்த நோவா பாக்யராஜ் (19), ரிஷிகுமார் (19) ஆகிய இருவரைக் கைது செய்தார். அவர்களிடமிருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவங்கள் குறித்துத் தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads









Thoothukudi Business Directory