» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிசு மரணங்களைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
வெள்ளி 17, ஜூலை 2026 5:42:07 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் மகப்பேறு இறப்பு மற்றும் சிசு இறப்புத் தடுப்பு தணிக்கை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மகப்பேறு மற்றும் சிசு மரணங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கர்ப்பிணிகள் தொடர் சிகிச்சை பெறுவதை உறுதி செய்தல், கர்ப்பகால பராமரிப்பு, ஸ்கேன் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை மற்றும் ஊட்டச்சத்து உணவு உட்கொள்வதை மருத்துவக் குழுவினர் கண்காணிக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மேலும், குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்படும் போது தாமதமின்றி மருத்துவமனைகளை அணுகுவது குறித்தும், தாய்மார்களுக்குத் தாய்ப்பால் புகட்டும் முறைகள் குறித்துச் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.
மாவட்டத்தில் மகப்பேறு இறப்பு ஏற்பட்டவுடன், அதுகுறித்து தேசிய சுகாதார திட்டக்குழு (NHM) மருத்துவ நிபுணர்களால் தணிக்கை செய்யப்படுகிறது. இந்தத் தரவுகள் மாதந்தோறும் நடைபெறும் அவசர மகப்பேறு மற்றும் சிசு பராமரிப்பு (CEmONC) கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியரால் இறுதித் தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது என விளக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட சுகாதார அலுவலர் யாழினி, கோவில்பட்டி மாவட்ட சுகாதார அலுவலர் வித்யா, நலப்பணிகள் இணை இயக்குநர் பொன்ரவி ஆகியோர் பங்கேற்றனர். இவர்களுடன் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளின் மகப்பேறு தலைமை மருத்துவர்கள், குழந்தை நல சிறப்பு மருத்துவர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுதா கருத்தரித்தல் மையம் சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்: ஆக.13, 14ல் நடைபெறுகிறது!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:35:31 PM (IST)

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:06:03 PM (IST)

மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2பேர் பரிதாப சாவு
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:30:22 AM (IST)

தூத்துக்குடி குடிநீர் பிரச்னையில் அமைச்சர் மவுனம் ஏன்? — பாஜக சராமாரி கேள்வி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:11:16 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:02:45 AM (IST)

டி.எம்.பி. அறக்கட்டளை சார்பில் 30 பேருக்கு இலவச டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 சிறப்புப் பயிற்சி!
புதன் 12, ஆகஸ்ட் 2026 10:08:10 AM (IST)








