» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இலஞ்சியில் சந்ததிகளின் சங்கம விழா : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 84 உறுப்பினர்கள் பங்கேற்பு
வெள்ளி 27, ஜனவரி 2012 9:19:58 PM (IST)

நெல்லை மாவட்டம், தென்காசி தாலுகா இலஞ்சி ஈஸ்வரன் பிள்ளைத் தெருவைச் சேர்ந்தவர் நல்லக்கண்ணு செட்டியார். இவரது மனைவி பழனியம்மாள் இவருடைய வாரிசுகள், நான்காம் தலை முறையை எட்டி விட்டனர். இந்த குடும்ப உறுப்பினர்களின் சந்ததியினர் க்லந்து கொண்ட சங்கம விழா மிக கோலாகலமாக எளிமையாக இலஞ்சியில் கொண்டாடப்பட்டது ,
இச்சந்திப்பில் 3 தலைமுறையை சேர்ந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொத்தம் 84 பேர் பங்கேற்றனர். தமிழகம் மற்றுமின்றி இந்தியா மற்றும் வெளிநாட்டில் வாழும் உறவினர்கள் குக்கிராமமான இலஞ்சியில் குவிந்தனர். காலை 8 மணிக்கு ஊர் முகப்பு வாயிலில் நின்று உறவினர்களை வரவேற்றவர்கள் பின்னர் அப்பகுதியில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் சாமி தரிசனத்தை முடித்து விட்டு வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிற்றுண்டியினை ஒருவருக்கு ஒருவர் ஊட்டி மகிழ்ந்தனர்.
பின்னர் 84 உறுப்பினர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது அப்போது இது போன்ற சந்ததியினரின் சந்திப்பு நிகழ்ச்சியால் உறவுகளை பலப்படுத்திக் கொள்வதுடன், தங்களுக்கு இடையே புரியாமல் சில வேளை ஏற்ப்பட்ட கருத்து வேற்றுமைகளும் கலைந்து காற்றில் சென்று விடுவதாக சிலர் கருத்து தெரிவித்தனர்.
மனவேற்றுமை இன்றி உறவினர்களுக்குள் இருக்கும் பொருளாதார ஏற்ற தாழ்வுகளை களைந்திடவும், கூட்டுக் குடும்பவாழ்க்கையின் தத்துவத்தை தங்கள் எதிர்கால வாரிசுகள் அறிந்து கொள்ளவும், குடும்பபாரம்பரியத்தை நவீன காலத்தில் இழந்து விடக்கூடாது என சுட்டிக்காட்டும் வகையிலும் இந்த சந்ததியினரின் சங்கம நிகழ்ச்சி தங்களுக்கு இன்றும் உணர்த்துவதாக நல்லக்கண்ணுவின் வாரிசுகள் தெரிவித்தனர்.
மதிய உணவின் போது பாயாசத்துடன், பாசமும் அனைவருக்கும் ஊட்டப்பட்டது.சிறிது நேர இடைவெளிக்கு பின்னர் அனைவரும் தங்கள் மூத்தோர்களின் கரம் பிடித்த படி இலஞ்சியில் உள்ள குமாரக்கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர். மாலையில் கேளிக்கைகளுக்கு பின்னர் ஒவ்வொருவரும் அவர்களுக்கு மூத்த பெரியோர்களிடம் ஆசி வாங்கும் நிகழ்ச்சியினை நேரில் கண்ட இலஞ்சி கிராம மக்கள் மனநிறைவுடன் நல்லக்கண்ணு குடும்பத்தை வாழ்த்தியது நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக இருந்தது.
கண் மூடி திறப்பதற்குள் நிகழ்காலத்தை மறந்து விடும் இன்றைய இண்டர்நெட் இளைய சமுதாயத்தினருக்கு இனிய குடும்பத்தின் இருக்கமான உறவை கண் முன் நிறுத்திக் காட்டிய நல்லக்கண்ணு-பழனியம்மாள் தம்பதியினரைப் போல அனைவரும் இது போன்ற சந்ததியினர் சங்கமம் நிகழ்ச்சியைத் தொடர்ந்தால் உறவுகள் பலப்படுவதுடன், பாரம்பரியமும் நிலைத்து நிற்கும்.
மக்கள் கருத்து
ந.arunachalamசெவ்வாய் 14, பிப்ரவரி 2012 - 10:20:44 AM | Posted IP 117.2*****
இது போன்ற கூtடங்கள் எங்கும் காண்பது அரிது .பல்வேறு இடங்களில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களை சாமர்த்தியமாக இணைத்த இரண்டாம் தலைமுரைஎனருக்கு என் வாழ்த்துக்கள் பயணம் தொடரட்டும்
நல்லகண்ணு சித்தார்த்தன், இலஞ்சிசெவ்வாய் 7, பிப்ரவரி 2012 - 12:24:43 PM | Posted IP 20.13*****
உறவுகள் ஏற்பட / அறிய / பலப்பட நாம் எடுத்திருக்கும் இந்த புதிய முயற்சி தொடர இறைவனையும், முன்னோர்களையும் ப்ரார்த்தனை செய்கிறேன்.
மேலும் பிறந்தநாள் மற்றும் மணநாளன்று ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்ளத் தொங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
Premalathaஞாயிறு 29, ஜனவரி 2012 - 06:50:20 PM | Posted IP 122.1*****
it is a wonderful occasion for me to participate in the family day function.thanks for publishing the article in your esteemed web portal
by premalatha
Piramanayagamஞாயிறு 29, ஜனவரி 2012 - 12:31:24 PM | Posted IP 223.2*****
Dear Tutyonline team, Thanks a lot .U have done a wonderful job for publishing a Social grand function held in a small village .Exemplary to all people to follow .my heartfelt gratitude to editorial team members too.
C.Piramanayagam
Tuticorin
வித்யா, அனுஷ்,தேனு,ராஜேஷ்,சனி 28, ஜனவரி 2012 - 07:44:38 PM | Posted IP 122.1*****
இந்த நாள் மறக்க முடியாத நாள். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அனைவர்க்கும் மிகுந்த நன்றி.இதைபோல் ஒவ்வொரு வருடமும் கொண்டாடவேண்டும்.
சுந்தர்,Perambalurசனி 28, ஜனவரி 2012 - 07:24:29 PM | Posted IP 115.2*****
Thanks பிரமநாயகம்
சுந்தர்,ராஜி, பிரதிபா,சூர்யா, பெரம்பலூர்.சனி 28, ஜனவரி 2012 - 07:18:49 PM | Posted IP 115.2*****
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த என்னுடைய தம்பிகள் சித்தார்த்தன், வேலாயுதம், ஸ்ரீதர், ஆனந்த், ராஜேஷ், ஈஸ்வரன்,சுரேஷ் மற்றும் பிரமநாயகம்,ரமேஷ், ராஜா சகோதரிகள் வசந்தி, கீதா, விக்கி, வேலம்மாள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி!
சுந்தர்,ராஜி,Pratheeba and Surya, Perambalurசனி 28, ஜனவரி 2012 - 07:09:37 PM | Posted IP 115.2*****
நாங்கள் மிகவும் ரசித்தோம். மறக்க முடியாத நிகழ்ச்சி. இது தொடரவேண்டும்...
சுந்தரராஜன்.Kசனி 28, ஜனவரி 2012 - 07:05:19 PM | Posted IP 115.2*****
it is a wonderful occassion which was organised by my brothers and sisters.
சுந்தரராஜன்.Kசனி 28, ஜனவரி 2012 - 07:05:18 PM | Posted IP 115.2*****
it is a wonderful occassion which was organised by my brothers and sisters.
சுந்தரராஜன்.கே.Ilanjiசனி 28, ஜனவரி 2012 - 06:32:18 PM | Posted IP 115.2*****
It is really wonderful occasion which was organised by my brothers and sisters. உறவுகள் பலப்பட இது ஒரு நல்ல நிகழ்ச்சி. அனைவரும் பின்பற்றலாமே!
babeemanishaசனி 28, ஜனவரி 2012 - 02:11:39 PM | Posted IP 123.2*****
Hand's of you!
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்திற்கு சிறப்பு தேர்தல் அதிகாரி நியமனம்!
புதன் 22, பிப்ரவரி 2012 6:47:30 PM (IST)

தூத்துக்குடியில் ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
புதன் 22, பிப்ரவரி 2012 6:10:02 PM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் காரில் கடத்தல்: கணவன் போலீசில் புகார்
புதன் 22, பிப்ரவரி 2012 3:47:01 PM (IST)

இளம் பெண்ணிடம் அத்துமீறிய போதை ஆசாமி: கண்டித்த கணவர் மீது தாக்குதல்!!
புதன் 22, பிப்ரவரி 2012 3:42:40 PM (IST)

குடும்ப உறவுகளை மேம்படுத்தியதா மின் தடை?!
புதன் 22, பிப்ரவரி 2012 1:11:38 PM (IST)

புனித மரியன்னை கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா
புதன் 22, பிப்ரவரி 2012 1:00:13 PM (IST)



சுந்தர்.கே, பெரம்பலூர்செவ்வாய் 14, பிப்ரவரி 2012 - 05:56:18 PM | Posted IP 115.2*****