» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அனுமதியின்றி கரிசல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்: 2 பேர் கைது!
புதன் 8, ஜூலை 2026 8:05:25 AM (IST)
கழுகுமலை அருகே முறையான அரசு அனுமதிச் சீட்டு இன்றிச் சட்ட விரோதமாகக் கரிசல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநர் உள்பட இருவரைக் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மாரிமுத்து தலைமையில் போலீசார் திங்கள்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்திச் சோதனை செய்த போது, திருவேங்கடம் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் இருந்து தெற்கு கழுகுமலைக்கு எவ்வித அரசு அனுமதிச் சீட்டும் இன்றிச் சட்டவிரோதமாகக் கரிசல் மண் ஏற்றிச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
சட்டவிரோத மண் கடத்தல் குறித்துக் கழுகுமலை போலீசார் முறைப்படி வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, கல்லூரணி காலனி தெருவைச் சேர்ந்த ராஜ் மகன், டிப்பர் லாரி ஓட்டுநர் முத்துக்குமார் (20), தென்காசி மாவட்டம் களப்பாலன்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்த செந்தூர்பாண்டியன் மகன் பூல்பாண்டி (38) ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கரிசல் மண்ணுடன் கூடிய டிப்பர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: மேயர் ஜெகன் பெரியசாமி!
வெள்ளி 17, ஜூலை 2026 8:59:15 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றம்: ஜூலை 25-ல் சப்பர பவனி!
வெள்ளி 17, ஜூலை 2026 8:35:25 AM (IST)

புகைப்படத்தைக் காட்டி மிரட்டிய விவகாரம்: பெண்ணை கத்தியால் குத்தி விட்டு வடமாநில வாலிபர் தற்கொலை
வெள்ளி 17, ஜூலை 2026 8:32:39 AM (IST)

கத்தியைக் காட்டி மிரட்டி வியாபாரியிடம் நகை, செல்போன் பறிப்பு : 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
வெள்ளி 17, ஜூலை 2026 8:27:04 AM (IST)

பஜாரில் அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டிய நபர் கைது!
வெள்ளி 17, ஜூலை 2026 7:57:17 AM (IST)

ஜவுளிக் கடையில் ரூ.2 லட்சம் திருட்டு: பெண் உள்பட 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு
வெள்ளி 17, ஜூலை 2026 7:37:15 AM (IST)








