» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வ.உ.சி துறைமுக கேண்டீன் தொழிலாளர்கள் 56 பேர் பணி நிரந்தரம்: சிஐடியு முயற்சி வெற்றி!
செவ்வாய் 7, ஜூலை 2026 5:30:43 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி துறைமுக கேண்டீன் தொழிலாளர்கள் 56 பேர் பணி நிரந்தர அறிவிப்பைத் துறைமுக நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய உணவு விடுதி ஊழியர்கள் 56 பேரைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி 1998 முதல் நடைபெற்ற சட்டப் போராட்டத்தில், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவுப்படி பணி நிரந்தர அறிவிப்பைத் துறைமுக நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
தற்போது பணியில் உள்ள 6 தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 56 தொழிலாளர்கள் 28.07.1998 முதல் முன் தேதியிட்டுப் பணி நிரந்தரம் செய்யப்படுகின்றனர். இவர்களுக்குத் துறைமுக ஊழியர்களுக்கான சம்பளம், பென்சன் உள்ளிட்ட ஓய்வூதிய உரிமைகள் மற்றும் அரியர்ஸ் நிதியுதவிகள் வழங்கப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1970-களில் தொடங்கப்பட்ட கேண்டீனில் பணிபுரிந்த ஊழியர்களுக்காகத் துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கம் மூலம் 1998-ல் வழக்குத் தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என 28 ஆண்டுகள் நடைபெற்ற நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, நீதியரசர்கள் எம்.எஸ்.ரமேஷ், சக்திவேல் அமர்வு தனி நீதிபதியின் சாதகமான தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, துறைமுக ஆணைய போர்டில் சிஐடியு பிரதிநிதி எஸ்.பாலகிருஷ்ணன் கொடுத்த தொடர் அழுத்தத்தால், துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்தகுமார் புரோகித் தலைமையிலான நிர்வாகம் இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றியைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் ஜனநாயக ஊழியர் சங்க அலுவலகத்தில் கூடி, சிஐடியு மாவட்டக் குழுவிற்கும், வழக்கறிஞர்களுக்கும் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் உணர்ச்சிப் பெருங்குடன் நன்றி தெரிவித்துக் கொண்டாடினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசு நடவடிக்கை: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 10:20:41 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: மேயர் ஜெகன் பெரியசாமி!
வெள்ளி 17, ஜூலை 2026 8:59:15 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றம்: ஜூலை 25-ல் சப்பர பவனி!
வெள்ளி 17, ஜூலை 2026 8:35:25 AM (IST)

புகைப்படத்தைக் காட்டி மிரட்டிய விவகாரம்: பெண்ணை கத்தியால் குத்தி விட்டு வடமாநில வாலிபர் தற்கொலை
வெள்ளி 17, ஜூலை 2026 8:32:39 AM (IST)

கத்தியைக் காட்டி மிரட்டி வியாபாரியிடம் நகை, செல்போன் பறிப்பு : 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
வெள்ளி 17, ஜூலை 2026 8:27:04 AM (IST)

பஜாரில் அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டிய நபர் கைது!
வெள்ளி 17, ஜூலை 2026 7:57:17 AM (IST)









P.manibharathiJul 8, 2026 - 03:17:37 PM | Posted IP 162.1*****