» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் சுற்றுவட்டாரப் பகுதியில் 63-வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்!

வெள்ளி 27, ஜனவரி 2012 6:26:58 PM (IST)



நாசரேத் சுற்றுவட்டாரப் பகுதியில் 63-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

நாசரேத் பேருராட்சி அலுவலகத்தில் தலைவர் ரவிசெல்வக்குமார் கொடியேற்றி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் ரவிக்குமார்,தேவதாஸ்,இந்திரா,ராஜசிங், ராமலட்சுமி,கஸ்தி ஜெயபால்,அருளானந்தம்,சுகாதார மேற்பார்வையாளர் சின்னத்துரை மற்றும் அலுவலக ஊழி யர்கள் கலந்துகொண்டனர்.

நாசரேத் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்து கொடியேற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் பர்சார் ஆனந்தஜோதிபாலன் கொடியேற்றினார்.

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் தாளாளர் லேவி அசோக்சுந்தர் ராஜ் தலமையில்முதல்வர் ஜெயக்குமார்.பர்சார் பொன்ராஜ், உடற்கல்விஇயக்குநர் பிரைட்டன்ஜோயல் ஆகியோர் முன் னிலையில் நாசரேத் காவல்நிலையஇன்ஸ்பெக்டர் இசக்கி முத்து கொடியேற்றினார்.

நாசரேத் மர்  காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் ஜோசப் ஜெபராஜ் தலைமையில், நாசரேத் பேருராட்சித் தலைவர் ரவி செல்வக்குமார் கொடியேற்றினார்.       நாசரேத் தூயயோவான் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியை ஜெயாபாக்கியம் கொடியே ற்றினார்.

நாசரேத் தூய யோவான் ஆசிரியை பயிற்சி நிறுவனத்தில் முதல்வர் லீதியாள் கிரேஸ்மணி தலைமை யில் தாளாளர் ஜோதிடேவிட் கொடியேற்றினார். நாசரேத் ரயில் நிலையத்தில் ஜெபஸ், ஜெயராஜ் ஆகியோர் முன்னிலையில் நிலைய மேலாளர் ஜாண்சன் கொடியேற்றினார்.

நாசரேத் திருமறையூர் காது கேளாதோர் பள்ளியில் தாளாளர் புஷ்பராஜ் கொடியேற்றினார். நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. பகுதி முன்னாள் இராணுவ வீரர்கள் சங்கம்சார்பில் பேருராட்சித்தலைவர் ரவிசெல்வக் குமார் கொடியேற்றி வைத்தார்.

நாசரேத் எஸ்.டி.ஏ.பள்ளியில் தலைமையாசிரியர் மில்டன் தலைமையில் பேருராட்சித் தலைவர் ரவி செல்வக்குமார் கொடியேற்றினார்.மாணவி ஜெரினின் பரதநாட்டியம் மற்றும் மாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.   

நாசரேத் கஸ்பா துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியை இன்பவள்ளி, உதவி ஆசிரியைகள் நளினி, ஜெபசெல்வி ஆகியோர் முன்னிலையில் தாளாளர் மாணிக்கம் கொடியேற்றினார். பிரகாசபுரம்-மூக்குப்பீறி இந்திய ஏகரட்சகர் சபை நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியை சாந்தி தலை மையில் தாளாளர் மதுரம் கொடியேற்றினார்.

சமத்துவபுரத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமையாசிரியை அன்னபாய்செல் வம் தலைமையில் நாசரேத் வணிகர் சங்கப் பொருளாளர் தங்கப்பழம் முன்னிலையில் தொழிலதிபர் ரமேஷ்ராஜா கொடியேற்றினார்.



மூலக்கரை-தேமான்குளம் தொடக்கப்பள்ளியில் தலைமை யாசிரியர் ராஜ்குமார்,கிராமகல்விக் குழுத்தலைவர் தாவீது ராஜா,புரவலர் பொன்ராஜ்,இளைஞர் நற்பணிமன்ற உறுப்பி னர் பொன்மாணிக்கராஜ்,கல்விக்குழு உறுப்பினர் அண்ணா மலை,உதவிஆசிரியை ஏசுவடியாள் செல்வி,பழைய மாண வர்கள்  கமல்,ஜெயபிரகாஷ், ஜெபஸ்டின் ஆகியோர் முன் னிலையில் தேமான்குளம் ஊராட்சிமன்றத்தலைவர் முத்து லெட்சுமி கொடியேற்றினார்.

நாசரேத் தாகூர் வித்யாலயா துவக்கப்பள்ளியில் ஆசிரியை ஜெர்மிளா முன்னிலையில் தலைமையாசிரியை மரகதம் ஜோதிபால் கொடியேற்றினார். கந்தசாமிபுரம் காமராஜர் இளைஞர் நற்பணி மன்றத்தில் பேருராட்சித்தலைவர் ரவிசெல்வக்குமார் கொடியேற்றினார். 

புளியங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி மன்றத்துணைத்தலைவர் முத்துக்கிறுஷ்ணன், தலைமையாசிரியை பெல்சியா செல்வராணி ஆசிரியர்கள் மாரியம்மாள்,மஹ்ஜபீன்,ஊர்பிரமுகர் அருள்ராஜ் ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி மன்றத்தலைவர் தங்கசெல்வி கொடியேற்றினார்.

நல்லூர் ஊராட்சிஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை யாசிரியை ரஜூலா,ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வேல் குமார் ஆகியோர் முன்னிலையில் ஊராட்சிமன்றத்தலைவர் பரிசமுத்து சுதாகர் கொடியேற்றினார்.    


மக்கள் கருத்து


ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads












Thoothukudi Business Directory