» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தொலைநோக்கு எண்ணம் கொண்ட தமிழக முதல்வர்: கோவில்பட்டி எம்எல்ஏ புகழாரம்!!

வெள்ளி 27, ஜனவரி 2012 5:59:00 PM (IST)


தமிழக அரசின் இலவச சைக்கிள் மற்றும் பள்ளி மாணவ - மாணவிகள் இடையில் நில்லாமல் பயிலும் வகையில் தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித் தொகைக்கான வைப்புத்தொகை சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கோவில்பட்டி அருகேயுள்ள முடுக்கு மீண்டான்பட்டி கே.ஆர். சாரதா அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார். முடுக்கு மீண்டான் பட்டி பஞ்சாயத்து தலைவி நாகஜோதி, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளாராக கோவில்பட்டி எம்.எல்.ஏ. கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு 125 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் மற்றும் 349 மாணவர்களுக்கு வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசுகையில் தமிழகத்தில் 3வதுமுறையாக முதல்வர் பொறுப்பபை ஏற்றுள்ள அம்மா அவர்கள் இந்தியாவில் தமிழகத்தினை முன்னோடி மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் நாள்தோறும் மக்களின் நலனுக்காக பல்வேறு நலதிட்டங்களை அறிவித்து வருகிறார். அதிலும் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். 

ஒரு மாநிலத்தின் பொருளாளதரம் முன்னேற வேண்டுமானல் கல்வி வளர்ச்சி முக்கியம் என்பதனை உணர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மனித வள மேம்பாடு அடைய வேண்டும் என்றால் கல்வியறிவு அவசியம் என்பதனை உணர்ந்து தொலை நோக்கு பார்வையுடன் கல்வித்துறைக்கு மடடுமின்றி மக்களுக்கு பயன்படும் நலதிட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் இன்று முன்னோடியாக திகழ்கிறது என்றால் அதற்கு தமிழக முதல்வர் மக்களிடையே கொண்டுள்ள அன்பு தான் காரணம்.

மாணவர்களுக்கு இலவச சைக்கிள், கல்வி உதவித்தொகை அதிகரித்தல், சீருடை வழங்குதல், பள்ளி கல்வியை மாணவர்கள் இடையில்நிற்கமால் இருக்க வேண்டும் என்பதற்காக வைப்புத் தொகை வழங்குதல், மாணவர்களின் எதிர் காலத்தினை கருத்தில் கொண்டு இலவச லேப்டாப் வழங்குதல் என கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தது மட்டுமின்றி எங்களைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் வழங்கி அதனை பயனாளிகளிடம் சென்றடைய வைத்துள்ளார். 

இந்த பள்ளி மாணவர்கள் அரசு தேர்வு எழுத தேர்வுமையம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போது அதை நான் கல்வித்துறை அமைச்சரிடம் தெரிவித்தேன். அதனை தொடர்ந்து தமிழக முதல்வர் அவர்கள் இப்பள்ளிக்கு தேர்வுமையம் வழங்கி உத்திரவிட்டார். இதேப்போன்று கல்வித்துறைக்கு தேவைப்படும் அனைத்தையும் இன்றைக்கு உடனுக்குடன் தமிழக முதல்வர் செய்து வருவதாக தெரிவித்தார்.

விழாவில் அதிமுக ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைப் பாண்டியன், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் ஈஸ்வர பாண்டியன், உள்பட பலர்கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

maheshசனி 28, ஜனவரி 2012 - 05:54:36 PM | Posted IP 117.2*****

super mla

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads












Thoothukudi Business Directory