» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
த.வெ.க. ஆட்சியைக் கவிழ்க்க திமுக ரூ.50 கோடி பேரம் : எம்.எல்.ஏ பரபரப்பு குற்றச்சாட்டு!
திங்கள் 6, ஜூலை 2026 5:34:31 PM (IST)
தமிழக அரசியலில் குதிரை பேரப் புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தால் ரூ.50 கோடி தருவதாகப் பேரம் பேசியதாக ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ விஜி சரவணன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ விஜி சரவணன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: "எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தால் சுமார் ரூ.50 கோடி தருவதாகக் கூறினர். மேலும், திமுகவுக்கு வந்தால் அமைச்சர் பதவி தருவதாகவும் பேரம் பேசினர். திமுக முக்கிய நிர்வாகி அனிதா ராதாகிருஷ்ணன் ஆட்கள் என்னிடம் இந்த பேரத்தை நடத்தினர். இந்த பேரத்திற்கு இணங்காவிட்டால் என்ன செய்வோம் என்று தெரியாது என மிரட்டல் விடுத்தனர்" என்று குறிப்பிட்டார். மேலும், தன்னிடம் பேரம் பேசியதாகக் கூறப்படும் தொலைபேசி ஆடியோ ஆதாரம் ஒன்றையும் விஜி சரவணன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தனது வெற்றியால் ஏற்பட்டுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் இணைந்து சமூக வலைதளங்களில் தன் மீது அவதூறு பரப்புவதாகவும் விஜி சரவணன் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் தவெக எம்.எல்.ஏ-வை விலைக்கு வாங்க ரூ.180 கோடியில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமாரைப் போலீசார் தேடி வருகின்றனர். தவெக ஆட்சியைத் தக்கவைக்க/கலைக்க இருதரப்பிலும் குதிரை பேரக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள சூழலில், அண்மையில் அதிமுகவிலிருந்து 6 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர்.
இந்த அரசியல் குதிரை பேரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அமைச்சரவைக் கூட்டத்தில் தனிநபர்கள் பங்கேற்றது குறித்தும் விசாரிக்கக் கோரி திமுக, அதிமுக, பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் இணைந்து கவர்னர் ஆர்.வி.அர்லேகரிடம் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தவெக எம்.எல்.ஏ இளையராஜா அளித்த பேரம் புகாரில் 10 பேர் கைதான நிலையில், விஜி சரவணன் வெளியிட்டுள்ள புதிய புகார் தமிழக அரசியலில் உஷ்ணத்தைக் கூட்டியுள்ளது.
மக்கள் கருத்து
உண்மைJul 6, 2026 - 06:11:58 PM | Posted IP 172.7*****
திமுக காரன் எப்படியாவது வச்சி செஞ்சிடுவான், ஆனால் கவனமாக இருக்க வேண்டும்
மேலும் தொடரும் செய்திகள்

ஓட்டப்பிடாரம், ஒட்டநத்தம் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 10:36:34 AM (IST)

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசு நடவடிக்கை: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 10:20:41 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: மேயர் ஜெகன் பெரியசாமி!
வெள்ளி 17, ஜூலை 2026 8:59:15 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றம்: ஜூலை 25-ல் சப்பர பவனி!
வெள்ளி 17, ஜூலை 2026 8:35:25 AM (IST)

புகைப்படத்தைக் காட்டி மிரட்டிய விவகாரம்: பெண்ணை கத்தியால் குத்தி விட்டு வடமாநில வாலிபர் தற்கொலை
வெள்ளி 17, ஜூலை 2026 8:32:39 AM (IST)

கத்தியைக் காட்டி மிரட்டி வியாபாரியிடம் நகை, செல்போன் பறிப்பு : 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
வெள்ளி 17, ஜூலை 2026 8:27:04 AM (IST)









BalaJul 7, 2026 - 09:32:41 AM | Posted IP 172.7*****