» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலை வசதி மேம்படுத்தக்கோரி உண்ணாவிரதம்

வெள்ளி 27, ஜனவரி 2012 5:52:05 PM (IST)



கோவில்பட்டி அருகே உள்ள காளாம்பட்டி மற்றும் குமரெட்டியாபுரம் கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் இருந்து கோவில்பட்டி வரவேண்டும் என்றால் வானரமுட்டி வழியாக உள்ள சாலையை பயன்படுத்தி தான் வர வேண்டும். 

ஆனால் காளாம்பட்டி கிராமத்தில் இருந்து வானரமுட்டி வரைவுள்ள சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் மிகவு ம் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி இரு கிராம மக்களும் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 

காளாம்பட்டி ஊரின் நூழை வாயிலில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கிராம முன்னேற்ற சங்க தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். குமரெட்டியாபுரம் கிராம முன்னேற்ற சங்க தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். கிராமங்களைச் சேர்ந்த 100 பெண்கள் உள்பட 250க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads












Thoothukudi Business Directory