» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மாநில அளவிலான நீச்சல் போட்டி

வெள்ளி 27, ஜனவரி 2012 4:38:39 PM (IST)

தூத்துக்குடியில் பியர்ல்சிட்டி, அக்குவாட்டிக் குழு சார்பாக மாநில அளவிலான நீச்சல் போட்டி நாளை மறுநாள் (ஜன.29ம் தேதி) தொடங்குகிறது. 

தருவை மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெறும் இப்போட்டிகளில் தூத்துக்குடி, நெல்லை, சென்னை, மதுரை, கோவை, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களிலிரருந்து 300க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கணைகள் கலந்து கொள்கின்றனர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு வெற்றிப் பதக்கம், சான்றிதழ் உட்பட ரூ.1லட்சம் வரை வழங்கப்படுகிறது. 

தொடக்கவிழா நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார். பரிசளிப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் தலைமை தாங்குகிறார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பியர்ல்சிட்டி அக்குவாட்டிக் குழு நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads












Thoothukudi Business Directory