» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போராட்டத்தில் ஈடுபடும் நர்சிங் மாணவியர் மீது நடவடிக்கை: தனியார் நர்சிங் மாணவியர் கோரிக்கை

வெள்ளி 27, ஜனவரி 2012 3:39:26 PM (IST)


தமிழக அரசின் ஆணைக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் அரசு நர்சிங் மாணவ, மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தனியார் நர்சிங் மாணவிகள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். 

மருத்துவ தேர்வாணையத்தின் மூலம் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கான பணித் தேர்வு புதிய முறையில் நடைபெறும் எனவும் தனியார் மருத்துவ கல்லூரியில் பயின்றவர்களும் அரசு மருத்துவமனைகளில் நர்சிங் பணியில் சேர்க்கப்படுவார்கள் என கடந்த வாரம் தமிழக அரசு சார்பில் அரசாணை பிறக்கப்பட்டது.

இந்த அறிவிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு நர்சிங் மாணவிகள் கடந்த 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அரசு பயிற்சி மாணவிகளின் கோரிக்கையை அரசு ஏற்றால் தங்கள் படிப்பு பாதிக்கபடும் என் தனியார் நர்சிங் மாணவியர் கருதுகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். 

அதில், அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் நர்சிங் கல்லூரி மற்றும் பள்ளியில் பயிலும் நர்சிங் மாணவ, மாணவியர் அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், அரசு ஆணை மற்றும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் போராட்டம் நடத்தும் அரசு நர்சிங் மாணவ, மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும், இந்தியா முழுவதும் தமிழகம் உட்பட அரசு வேலை வாய்ப்பு என்பது தனியார் கல்லூரியில் பயின்றாலும், அரசு கல்லூரியில் பயின்றாலும் சமமாக கருதி ஆசிரியர் பணி, இன்ஜினியர் பணி, மருத்துவர் பணி, குமாஸ்தா என அனைத்து பணிகளும் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுகின்றனர். ஆனால், தமிழகத்தில் மட்டும் செவிலியர் பணியடில் அரசு நர்சிங் கல்லூரிகளில் பயின்றால்தான் அரசு வேலை வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையை போக்க நீதிமன்றங்களின் தீர்ப்பின் அடிப்படையில் தனியார் பள்ளிகளிலும் பயின்றாலும் செவிலியர்களுக்கு அரசு பணி வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசாணை பிறப்பித்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் 75ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் நர்சிங் கல்லூரியில் பயின்ற மாணவ, மாணவியர் பயனடைவர் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். 


மக்கள் கருத்து


ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads












Thoothukudi Business Directory