» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மத்திய அரசின் துரோகம் தொடர்ந்தால் இந்திய இறையாண்மை பாதிக்கப்படும்: வைகோ எச்சரிக்கை

வியாழன் 26, ஜனவரி 2012 11:16:10 AM (IST)


தமிழ்நாட்டிற்கு மத்திய காங்கிரஸ் அரசு தொடர்ந்து துரோகம் இழைத்தால் இந்திய இறையான்மை பாதிக்கப்படும் என்று தூத்துக்குடியில் வைகோ பேசினார்.

தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் தூத்துக்குடி மீனாட்சிபுரத்தில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஜோயல் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் நாசரேத் துரை முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில்,  தமிழினப் படுகொலை, முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை, கூடங்குளம் அணு மின் திட்டம் என தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் மத்திய காங்கிரஸ் அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. 

இதே காங்கிரஸ் கட்சி அன்று இந்தி திணிப்பு மூலம் தமிழகத்திற்கு துரோகம் இழைத்தது. அண்ணா, பெரியார் ஆகியோர் அன்று இருந்தனர். இன்று அவர்கள் இல்லை. கூடங்குளம் பிரச்சனையில் மக்கள் போராட்டத்திற்கு, கிறிஸ்தவ பாதிரியார்கள் ஆதரவளித்ததற்காக மத்திய அரசு அவர்களை கொச்சைபடுத்துகிது.

தமிழகத்திற்காகவும், உலகத் தமிழக்காக வைகோ தொடர்ந்து போராடுவார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அப்புறப்படுத்தும் வரை தொடர்ந்து குரல் கொடுப்பேன். மத்திய அரசின் தமிழகத்திற்கு எதிரான துரோகம் தொடர்ந்தால் இந்திய இறையான்மை உடைந்து விடும். தெற்கு சூடான் போல் தமிழீழமும் மலர்ந்தே தீரும். இவ்வாறு அவர் பேசினார். 

கூட்டத்தில் மாநில சட்டத்துறை செயலாளர் வக்கீல் சுப்புரத்தினம், மாநில மீனவர் அணி துணை செயலாளர் நக்கீரன், கலை இலக்கிய அணி துணை செயலாளர் மகராஜன், பேராசிரியை பாத்திமா பாபு, நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன், மாநகர் மாவட்ட செயலாளர் பெருமாள், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் கே.எம்.ஏ.நிஜாம், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் வித்யாசுரேஷ், தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

நாகராஜ்வெள்ளி 27, ஜனவரி 2012 - 05:16:25 PM | Posted IP 180.2*****

இந்தியாவில் இறையாண்மை என்று ஒன்று இருக்கிறதா?

அறிவாளிவியாழன் 26, ஜனவரி 2012 - 11:32:54 AM | Posted IP 180.2*****

ஈழத்தில் நடந்த விடுதலை போராட்டத்தை சோனியா இந்திய ராணுவத்தை கொண்டு அழித்து விட்டது மிகப் பெரிய துரோகம். இப்போது ஈழ மக்களுக்கு காங்கிரஸ் அரசு செய்த நன்மைகள் என ஒரு புத்தகம் வெளியிடுவது தமிழ் மக்களுக்கு செய்யும் மிகப் மிகப் பெரிய துரோகம். வேளை வரும்போது துரோகத்துக்கு உண்டான கூலி மிகவும் சரியாகவே காங்கரஸ் கட்சிக்கு தரப்படும்.

ஜோசப்வியாழன் 26, ஜனவரி 2012 - 11:28:55 AM | Posted IP 180.2*****

இன்று நேற்று அல்ல. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே அது தமிழ் நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் செய்தே வருகிறது. அதனால்தான் தமிழ் மக்கள் அந்த கட்சியை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து இருக்கிறார்கள். அந்த கட்சி தன போக்கிலிருந்து திருந்துவதாக தெரியவில்லை. எனவே இந்தியா துண்டு துண்டாக உடையும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads












Thoothukudi Business Directory