» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை: வாலிபர் கைது; செல்போன் பறிமுதல்!
திங்கள் 8, ஜூன் 2026 11:07:04 AM (IST)
தூத்துக்குடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலமாக சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த வாலிபரைத் போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள கிரேஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவன் மகன் ராம்குமார் (36). இவர் தமிழக அரசால் சட்டம் மூலம் தடை செய்யப்பட்டுள்ள வெளிமாநில மற்றும் ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை இணையதளம் மூலமாகப் பலருக்கும் ரகசியமாக விற்பனை செய்து வருவதாகக் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில், தாளமுத்துநகர் காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர விசாரணை மற்றும் திடீர் சோதனை நடத்தினர். விசாரணையில், ராம்குமார் தனது செல்போன் மூலமாக ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சட்டவிரோத லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ராம்குமாரைத் தாளமுத்துநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும், ஆன்லைன் லாட்டரி வியாபாரத்திற்கு அவர் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வந்த செல்போனையும் அவரிடமிருந்து பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தாளமுத்துநகர் காவல்துறையினர் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாநகரப் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஓட்டப்பிடாரம், ஒட்டநத்தம் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 10:36:34 AM (IST)

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசு நடவடிக்கை: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 10:20:41 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: மேயர் ஜெகன் பெரியசாமி!
வெள்ளி 17, ஜூலை 2026 8:59:15 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றம்: ஜூலை 25-ல் சப்பர பவனி!
வெள்ளி 17, ஜூலை 2026 8:35:25 AM (IST)

புகைப்படத்தைக் காட்டி மிரட்டிய விவகாரம்: பெண்ணை கத்தியால் குத்தி விட்டு வடமாநில வாலிபர் தற்கொலை
வெள்ளி 17, ஜூலை 2026 8:32:39 AM (IST)

கத்தியைக் காட்டி மிரட்டி வியாபாரியிடம் நகை, செல்போன் பறிப்பு : 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
வெள்ளி 17, ஜூலை 2026 8:27:04 AM (IST)








