» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை : கலந்தாய்வு நாளை தொடங்குகிறது
வியாழன் 4, ஜூன் 2026 8:19:13 AM (IST)
கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவியருக்கான கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல், கணிதம், புவியமைப்பியல், இயற்பியல், பி.ஏ. பொருளியல், தமிழ், ஆங்கிலம், வரலாறு, பி.காம் வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. இந்த பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கான கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
அன்று மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், அந்தமான்- நிக்கோபார் தமிழ் மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படை, பாதுகாப்பு படை வீரர் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான சிறப்பு கலந்தாய்வு நடக்கிறது.
வருகிற 8-ந்தேதி பி.எஸ்.சி. பாடப்பிரிவுகளுக்கும், 9-ந் தேதி பி.காம்., பி.ஏ. பொருளியல் பாடப்பிரிவுகளுக்கும், 10-ந் தேதி பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோருடன் குறிப்பிட்ட நாட்களில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றுகள், மாற்று சான்றிதழ், ஆதார் அட்டை, ஜாதி சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல், நகல் தலா 3 பிரதி, வருமான சான்று நகல் 3 பிரதி, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 5, சேர்க்கை கட்டணம், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி ஆகியவற்றுடன் வரவேண்டும்.
மேலும் காலியிடங்கள் இருக்கும் பாடப்பிரிவுகளுக்கு 18-ந்தேதி வரை தொடர் கலந்தாய்வு நடைபெறும் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சந்தனமாரியம்மாள் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆட்சி அதிகார மமதையில் பெண்களை மிரட்டுவதா? தவெக எம்எல்ஏவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!
செவ்வாய் 9, ஜூன் 2026 5:39:23 PM (IST)

கோடைகாலத்திலும் தடையின்றி நிறைவான குடிநீர் விநியோகம்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:48:12 PM (IST)

தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் ரூ.6 லட்சம் கல்வி உதவித்தொகை : முன்னாள் மாணவர்கள் வழங்கல்!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:30:21 PM (IST)

உணவு ஊட்டசத்து இயல், உடல் எடை சீரமைப்பு பயிற்சிகள் : தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 9, ஜூன் 2026 3:18:01 PM (IST)

வ.உ.சி. துறைமுகத்தின் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் : பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத் கோரிக்கை!
செவ்வாய் 9, ஜூன் 2026 12:34:56 PM (IST)

தூத்துக்குடியில் மெகா கப்பல் கட்டும் தளம் : தென் கொரியாவில் அமைச்சர் கீர்த்தனா ஆலோசனை!
செவ்வாய் 9, ஜூன் 2026 12:08:09 PM (IST)









