» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நெட்டூர் வன்கொடுமையைக் கண்டித்துத் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!
புதன் 3, ஜூன் 2026 9:37:35 PM (IST)

நெட்டூர் கிராமத்தில் திருமண நிகழ்ச்சியில் புகுந்து, சாதிய வன்மத்துடன் தாக்குதல் நடத்திய சம்பவத்தைக் கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களின் திருமண நிகழ்ச்சியில் புகுந்து, சாதிய வன்மத்துடன் தாக்குதல் நடத்திய மனிதநேயமற்ற சம்பவத்தைக் கண்டித்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தூத்துக்குடி மாவட்டக் குழு சார்பில் இன்று நகரின் மையப்பகுதியான விவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்குத் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் தி. சீனிவாசன் தலைமை வகித்தார். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க (DYFI) மாநிலச் செயலாளர் எஸ். கார்த்திக், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் கே. காசி, மாவட்டப் பொருளாளர் ஏ. வயண பெருமாள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்துக் கண்டன உரையாற்றினர்.
இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிஐடியு (CITU) சார்பில் மாவட்டச் செயலாளர் ஆர். ரசல், மக்கள் ஒற்றுமை மேடை தா. ராஜா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் துணைத் தலைவர்கள் சண்முகராஜ், ரவிச்சந்திரன், எம். எஸ். முத்து, சங்கரன், கருப்பசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் நேசமணி, மாவட்டச் செயலாளர் தினேஷ் குமார், மாணவர் சங்கம் (SFI) மாவட்டச் செயலாளர் ராம் குமார், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மருத்துவர் சிவநாகரன் உள்ளிட்ட பல்வேறு இடதுசாரி மற்றும் முற்போக்கு அமைப்புகளின் தோழர்கள் திரளாகக் கலந்துகொண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆட்சி அதிகார மமதையில் பெண்களை மிரட்டுவதா? தவெக எம்எல்ஏவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!
செவ்வாய் 9, ஜூன் 2026 5:39:23 PM (IST)

கோடைகாலத்திலும் தடையின்றி நிறைவான குடிநீர் விநியோகம்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:48:12 PM (IST)

தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் ரூ.6 லட்சம் கல்வி உதவித்தொகை : முன்னாள் மாணவர்கள் வழங்கல்!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:30:21 PM (IST)

உணவு ஊட்டசத்து இயல், உடல் எடை சீரமைப்பு பயிற்சிகள் : தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 9, ஜூன் 2026 3:18:01 PM (IST)

வ.உ.சி. துறைமுகத்தின் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் : பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத் கோரிக்கை!
செவ்வாய் 9, ஜூன் 2026 12:34:56 PM (IST)

தூத்துக்குடியில் மெகா கப்பல் கட்டும் தளம் : தென் கொரியாவில் அமைச்சர் கீர்த்தனா ஆலோசனை!
செவ்வாய் 9, ஜூன் 2026 12:08:09 PM (IST)









