» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ரூ.72 லட்சம் பண மோசடி : தவெக நிர்வாகி - மனைவி மீது வழக்குப் பதிவு!
புதன் 3, ஜூன் 2026 12:20:16 PM (IST)

தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.72 லட்சம் பண மோசடி செய்ததாக தவெக நிர்வாகி மீது மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா, பரமன்குறிச்சி பிச்சுவிளையைச் சேர்ந்தவர் கோபி (45). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் ஏரல் பகுதியைச் சேர்ந்த திருப்பதி மகன் ராஜா என்பவருக்குச் சொந்தமான ரூ.90 லட்சத்திற்கு விலை பேசியுள்ளனர்.
இதற்கென முதற்கட்ட முன்பணமாக ரூ.72 லட்சத்தை அவரிடம் கோபி செலுத்தியுள்ளார். இதனை முன்பணமாகப் பெற்றுக் கொண்ட ராஜா மற்றும் அவரது மனைவி பொன்தெய்வம் ஆகிய இருவருடன், மீதித் தொகை ரூ.18 லட்சத்தை வரும் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் வழங்கி கிரைய ஆவணம் பதிவு செய்துகொள்ள வேண்டும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
வங்கி கணக்கில் ரூ.72 லட்சம் பணம் ஏறியவுடன், ராஜா மற்றும் அவரது மனைவி பொன்தெய்வம் ஆகியோர் சொத்தை கிரயம் செய்து தராமல் கோபியுடனான தொடர்பைத் துண்டித்துள்ளனர். மேலும், தங்களது வீட்டைப் பூட்டிவிட்டு ஊரை காலி செய்துவிட்டுத் தலைமறைவாகினர். இது குறித்துக் கோபி அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி மிரட்டல் விடுத்துள்ளனர்.
தான் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோபி, இது குறித்துத் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் ஏரலைச் சேர்ந்த ராஜா மற்றும் அவரது மனைவி பொன்தெய்வம் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ள ராஜா தமிழக வெற்றிக் கழகத்தின் நகரச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை- திருச்செந்தூர் இடையே ரயில் சேவையில் மாற்றம் : தென்னக ரயில்வே அறிவிப்பு
செவ்வாய் 9, ஜூன் 2026 8:37:25 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஊதிய வழக்கு: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜூன் 16-ல் தீர்ப்பு!
செவ்வாய் 9, ஜூன் 2026 8:32:07 PM (IST)

குற்றச் செயல்களில் தவெகவிற்குத் தொடர்பில்லை : தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அறிக்கை!
செவ்வாய் 9, ஜூன் 2026 8:23:34 PM (IST)

ஆட்சி அதிகார மமதையில் பெண்களை மிரட்டுவதா? தவெக எம்எல்ஏவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!
செவ்வாய் 9, ஜூன் 2026 5:39:23 PM (IST)

கோடைகாலத்திலும் தடையின்றி நிறைவான குடிநீர் விநியோகம்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:48:12 PM (IST)

தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் ரூ.6 லட்சம் கல்வி உதவித்தொகை : முன்னாள் மாணவர்கள் வழங்கல்!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:30:21 PM (IST)









