» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காங்கிரஸ் கட்சியினர் 75 பேர் திமுகவில் ஐக்கியம் : கீதாஜீவன் முன்னிலையில் இணைந்தனர்!
செவ்வாய் 2, ஜூன் 2026 10:19:01 AM (IST)

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 75 பேர், அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் காரணமாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு தரப்பினர், அக்கட்சி தமிழக வெற்றிக் கழகத்தோடு கூட்டணி அமைத்ததை விரும்பாமல் மாற்றுக்கட்சிகளில் இணைந்து வருவதாக கூறப்படுகிறது. தூத்துக்குடியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராஜன் மற்றும் முரளிதரன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
இந்நிலையில், எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் நடைபெற்ற கழ்ச்சியில், 40-வது வார்டு காங்கிரஸ் தலைவர் ஜோ பர்னாந்து, மிக்கேல் ரெஜினா, ஈஸ்வரி, வழக்கறிஞர் பட்டுராஜா, சுரேஷ், சக்திவேல், ராஜ்குமார், முருகேசன், பிரேமா, கலா, மல்லிகா உட்பட 75 பேர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
திமுகவில் இணைந்த அனைவரையும் வரவேற்றுப் பொன்னாடை போர்த்திய கீதாஜீவன், அவர்களுக்கு திமுக வேட்டி மற்றும் சேலைகளை வழங்கி வாழ்த்தினார். பின்னர் அவர் பேசுகையில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையையேற்று இணைந்துள்ள உங்களை, வடக்கு மாவட்ட திமுக மகிழ்ச்சியோடு வரவேற்கிறது. வரும் காலங்களில் உங்களது பகுதிகளில் திமுகவின் வெற்றிக்கு உங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்ற வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், கருணாநிதி, திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அணித் தலைவர்கள் அருண்குமார், பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், நாகராஜன், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப் பிரதிநிதி பாஸ்கர் மற்றும் சாந்தி மேரி, கமலாதேவி, மணி, ஆல்பர்ட் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை- திருச்செந்தூர் இடையே ரயில் சேவையில் மாற்றம் : தென்னக ரயில்வே அறிவிப்பு
செவ்வாய் 9, ஜூன் 2026 8:37:25 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஊதிய வழக்கு: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜூன் 16-ல் தீர்ப்பு!
செவ்வாய் 9, ஜூன் 2026 8:32:07 PM (IST)

குற்றச் செயல்களில் தவெகவிற்குத் தொடர்பில்லை : தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அறிக்கை!
செவ்வாய் 9, ஜூன் 2026 8:23:34 PM (IST)

ஆட்சி அதிகார மமதையில் பெண்களை மிரட்டுவதா? தவெக எம்எல்ஏவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!
செவ்வாய் 9, ஜூன் 2026 5:39:23 PM (IST)

கோடைகாலத்திலும் தடையின்றி நிறைவான குடிநீர் விநியோகம்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:48:12 PM (IST)

தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் ரூ.6 லட்சம் கல்வி உதவித்தொகை : முன்னாள் மாணவர்கள் வழங்கல்!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:30:21 PM (IST)










அதுJun 2, 2026 - 11:17:16 AM | Posted IP 172.7*****