» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தீக்குளித்து இளம்பெண் தற்கொலை: காப்பாற்ற முயன்ற கணவன் படுகாயம்!!
புதன் 25, ஜனவரி 2012 11:58:00 AM (IST)
தூத்துக்குடி பாண்டுரங்கன் தெருவைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி செல்வி (24). இந்த தம்பதியருக்கு கடந்த ஒன்றேகால் ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 4மாத ஆண் குழந்தை குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பின்னர் சங்கர் மனைவியை விட்டுவிட்டு அடிக்கடி தனது தாயார் வீட்டுக்குச் சென்றுவிடுவாராம்.
இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த பொங்கல் பண்டிகைக்கு தாயார் வீட்டுக்கு சென்ற அவர் 2நாட்களுக்கு பின்னர்தான் வீடு திரும்பினாராம். இதனால் மனைவி செல்வி மனவருத்தம் அடைந்தார். இதுதொடர்பாக கணவரிடம் வாக்குவதத்தில் ஈடுபட்டார். இனிமேல் இதுபோன்று நடந்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினாராம்.
மேலும், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்த செல்வி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்று படுகாயமடைந்த கணவர் சிகிச்சை பெற்று வருகிறார். தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருமணமாகி ஒன்றேகால் ஆண்டுகளே ஆனதால் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்திற்கு சிறப்பு தேர்தல் அதிகாரி நியமனம்!
புதன் 22, பிப்ரவரி 2012 6:47:30 PM (IST)

தூத்துக்குடியில் ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
புதன் 22, பிப்ரவரி 2012 6:10:02 PM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் காரில் கடத்தல்: கணவன் போலீசில் புகார்
புதன் 22, பிப்ரவரி 2012 3:47:01 PM (IST)

இளம் பெண்ணிடம் அத்துமீறிய போதை ஆசாமி: கண்டித்த கணவர் மீது தாக்குதல்!!
புதன் 22, பிப்ரவரி 2012 3:42:40 PM (IST)

குடும்ப உறவுகளை மேம்படுத்தியதா மின் தடை?!
புதன் 22, பிப்ரவரி 2012 1:11:38 PM (IST)

புனித மரியன்னை கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா
புதன் 22, பிப்ரவரி 2012 1:00:13 PM (IST)



மணிவெள்ளி 27, ஜனவரி 2012 - 03:45:40 PM | Posted IP 220.2*****