» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாணவர்களுக்கான இலவசத் திறன் மேம்பாட்டு முகாம் : ஆட்சியர் தொடங்கி விஷு மகாஜன் வைத்தார்!
திங்கள் 11, மே 2026 4:22:57 PM (IST)
தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி இணைந்து நடத்தும் "கோடை கொண்டாட்டம்" என்ற வாழ்வியல் திறன் பயிற்சி முகாம் இன்று தொடங்கியது.
மாணவர்களின் கோடை விடுமுறையைப் பயனுள்ளதாகவும், அவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையிலும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி இணைந்து "கோடை கொண்டாட்டம்" என்ற வாழ்வியல் திறன் பயிற்சி முகாமைத் தொடங்கியுள்ளன.
இன்று (11.05.2026) தொடங்கியுள்ள இந்த முகாம், வரும் மே 30-ஆம் தேதி வரை தூத்துக்குடி மாநகராட்சியின் அறிவியல் பூங்கா (STEM Park) வளாகத்தில் நடைபெற உள்ளது. 5 வயது முதல் 15 வயது வரை உள்ள மாணவர்கள் இதில் முற்றிலும் இலவசமாகப் பங்கேற்கலாம். முகாம் தினமும் மாலை 3.00 மணி முதல் 7.00 மணி வரை நடைபெறும்.
தினமும் மாலை 3.00 மணி முதல் 4.00 மணி வரை பல்வேறு சுவாரசியமான தலைப்புகளில் வகுப்புகள் நடைபெறும்.
அறிவியல் & கணிதம்: கணக்கும் இனிக்கும், அறிவோம் அறிவியல், எங்கும் கணிதம், Optics and Astrophysics.
கலை & கைவினை: காகிதத்தில் கைவண்ணம் (Origami), மண்ணும் பேசும் (Clay Work), பனைப் பொருட்களில் கலைப் பொருட்கள்.
விழிப்புணர்வு அமர்வுகள்: நிதி அறிவு (Financial Literacy), சமூக ஊடக விழிப்புணர்வு, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போக்குவரத்து விதிகள்.
திறன் மேம்பாடு: மேடைப் பேச்சு, புத்தகம் மற்றும் செய்தித்தாள் வாசிப்பு, ஓவியம், மாயாஜாலம் (Magic).
வார இறுதித் திரைப்படங்கள்: சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களின் சிந்தனைத் திறனை வளர்க்கும் வகையில் 'Children of Heaven', 'Tintin', 'The Way Home' போன்ற கருத்துள்ள திரைப்படங்கள் திரையிடப்பட்டு, அதன் பின் கலந்துரையாடல் நடைபெறும்.
மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை சதுரங்கம் (Chess), ரூபிக்ஸ் கியூப், சிலம்பம், யோகா மற்றும் ஸ்போக்கன் இங்கிலீஷ் போன்ற வகுப்புகள் நடைபெறும். இவை "முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை" என்ற அடிப்படையில் ஒதுக்கப்படும்.
பெற்றோர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்கள் குழந்தைகளின் தனித்திறன்களை வளர்க்க முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் கேட்டுக்கொண்டுள்ளார். கூடுதல் விபரங்கள் மற்றும் முன்பதிவிற்கு +91 9597613988 / +91 8220750082 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது அறிவியல் பூங்கா வளாகத்தில் நேரில் பதிவு செய்யலாம்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை- திருச்செந்தூர் இடையே ரயில் சேவையில் மாற்றம் : தென்னக ரயில்வே அறிவிப்பு
செவ்வாய் 9, ஜூன் 2026 8:37:25 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஊதிய வழக்கு: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜூன் 16-ல் தீர்ப்பு!
செவ்வாய் 9, ஜூன் 2026 8:32:07 PM (IST)

குற்றச் செயல்களில் தவெகவிற்குத் தொடர்பில்லை : தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அறிக்கை!
செவ்வாய் 9, ஜூன் 2026 8:23:34 PM (IST)

ஆட்சி அதிகார மமதையில் பெண்களை மிரட்டுவதா? தவெக எம்எல்ஏவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!
செவ்வாய் 9, ஜூன் 2026 5:39:23 PM (IST)

கோடைகாலத்திலும் தடையின்றி நிறைவான குடிநீர் விநியோகம்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:48:12 PM (IST)

தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் ரூ.6 லட்சம் கல்வி உதவித்தொகை : முன்னாள் மாணவர்கள் வழங்கல்!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:30:21 PM (IST)









