» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மின் கம்பத்தில் கார் மோதி விபத்து : வாலிபர் பலி; நண்பர்கள் மூவர் படுகாயம்!
திங்கள் 11, மே 2026 4:11:51 PM (IST)
தூத்துக்குடியில் கார் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதிய விபத்தில், வாலிபர் உயிரிழந்தார். மேலும் அவரது நண்பர்கள் மூவர் படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு மீனவர் காலனியைச் சேர்ந்தவர் செல்வம் மகன் ஜீசஸ் (18) என்பவர், தனது நண்பர்களான சரவணகுமார் (24), அரவிந்த் (18) மற்றும் அஸ்வின் (18) ஆகியோருடன் நேற்று அதிகாலை திருச்செந்தூர் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். காரை தாளமுத்துநகர் சுனாமி காலனியைச் சேர்ந்த காளிதாஸ் (21) என்பவர் ஓட்டியுள்ளார்.
சாந்தி நகர் அருகே கார் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அதிவேகமாகச் சென்று சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை 6:20 மணியளவில் ஜீசஸ் சிகிச்சை பலனின்றி பரிச்சயமானார். மற்ற மூவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கார் ஓட்டுநர் காளிதாஸ் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ஞாயிறு 24, மே 2026 8:38:47 PM (IST)

உரத்தின் விலையை பல மடங்கு உயர்ந்திய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் முடிவு!
ஞாயிறு 24, மே 2026 8:36:21 PM (IST)

வீட்டின் வெளியே தூங்கிய பெண் பாம்பு கடித்துப் பரிதாப பலி! – தூத்துக்குடி அருகே பரிதாபம்!
ஞாயிறு 24, மே 2026 2:09:01 PM (IST)

குடும்பத் தகராறில் விஷம் குடித்த விவசாயி சாவு!
ஞாயிறு 24, மே 2026 2:00:56 PM (IST)

தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உடைகள், கையுறைகள் : மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்
ஞாயிறு 24, மே 2026 12:42:00 PM (IST)

தூத்துக்குடியில் 14 மணிநேர தொடர் மின்வெட்டு : பொதுமக்கள் கடும் அவதி!
ஞாயிறு 24, மே 2026 12:31:32 PM (IST)










