» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விஜய் முதல்வர்: தூத்துக்குடியில் தவெகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!
ஞாயிறு 10, மே 2026 12:36:05 PM (IST)

தமிழகத்தின் 13-ஆவது முதலமைச்சராக ஜோசப் விஜய் இன்று பதவியேற்றதை வரவேற்று தூத்துக்குடியில் தவெக கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
தூத்துக்குடி எஸ்.எஸ். மாணிக்கபுரத்தில் நடைபெற்ற இந்தக் கொண்டாட்ட நிகழ்விற்கு, தவெக வடக்குத் தொகுதி துணைச் செயலாளர் செல்வன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டு, தங்கள் தலைவர் முதலமைச்சரானதை உற்சாக முழக்கங்களுடன் கொண்டாடினர்.
நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய துணைச் செயலாளர் செல்வன்: "எங்கள் தலைவர் விஜய் சொன்ன திட்டங்களை நிச்சயம் நிறைவேற்றுவார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் தவெக-வுக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இடதுசாரி தலைவர்கள் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோருக்கு எங்கள் கட்சி சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் வடக்குத் தொகுதி பொருளாளர் எஸ். காதர் மைதீன், இணைச் செயலாளர் ஜாக்சன் மற்றும் கழகத் தோழர்கள் பிரிட்டோ, சுரேஷ், மகாராஜா, வேலு, அஜிஸ் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த முத்துக்குமார், சுடலை, கங்கா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குற்றச் செயல்களில் தவெகவிற்குத் தொடர்பில்லை : தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அறிக்கை!
செவ்வாய் 9, ஜூன் 2026 8:23:34 PM (IST)

ஆட்சி அதிகார மமதையில் பெண்களை மிரட்டுவதா? தவெக எம்எல்ஏவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!
செவ்வாய் 9, ஜூன் 2026 5:39:23 PM (IST)

கோடைகாலத்திலும் தடையின்றி நிறைவான குடிநீர் விநியோகம்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:48:12 PM (IST)

தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் ரூ.6 லட்சம் கல்வி உதவித்தொகை : முன்னாள் மாணவர்கள் வழங்கல்!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:30:21 PM (IST)

உணவு ஊட்டசத்து இயல், உடல் எடை சீரமைப்பு பயிற்சிகள் : தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 9, ஜூன் 2026 3:18:01 PM (IST)

வ.உ.சி. துறைமுகத்தின் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் : பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத் கோரிக்கை!
செவ்வாய் 9, ஜூன் 2026 12:34:56 PM (IST)









