» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முத்துநகர் எக்ஸ்பிரஸ் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை : தூத்துக்குடியில் சோகம்
ஞாயிறு 10, மே 2026 12:27:59 PM (IST)
தூத்துக்குடியில் ரயில் தண்டவாளத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலிருந்து தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 5:30 மணியளவில் தூத்துக்குடி வி.எம்.எஸ். நகர் பகுதியில் உள்ள தண்டவாளப் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது, அங்கிருந்த நபர் ஒருவர் திடீரென ரயிலின் முன் பாய்ந்துள்ளார். இதில் ரயிலில் அடிபட்ட அந்த நபர் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ரயிலின் லோகோ பைலட் அளித்த தகவலின் பேரில், ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இறந்தவர் சுமார் 50 மதிக்கத்தக்க ஆண். பெயர், முகவரி விபரம் தெரியவில்லை. மஞ்சள் மற்றும் சாம்பல் நிற கோடு போட்ட டீ-சர்ட் மற்றும் அரக்கு நிற பேண்ட் அணிந்திருந்தார். பலியான நபரின் உடல் மிகவும் சிதைந்த நிலையில் இருந்ததால், அவரது அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தியும், இதுவரை அந்த நபர் யார் என்பது குறித்த விபரங்கள் கிடைக்கவில்லை. இது குறித்து ரயில்வே போலீசார், வழக்குப்பதிவு செய்து உயிரிழந்தவர் யார்? தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை- திருச்செந்தூர் இடையே ரயில் சேவையில் மாற்றம் : தென்னக ரயில்வே அறிவிப்பு
செவ்வாய் 9, ஜூன் 2026 8:37:25 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஊதிய வழக்கு: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜூன் 16-ல் தீர்ப்பு!
செவ்வாய் 9, ஜூன் 2026 8:32:07 PM (IST)

குற்றச் செயல்களில் தவெகவிற்குத் தொடர்பில்லை : தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அறிக்கை!
செவ்வாய் 9, ஜூன் 2026 8:23:34 PM (IST)

ஆட்சி அதிகார மமதையில் பெண்களை மிரட்டுவதா? தவெக எம்எல்ஏவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!
செவ்வாய் 9, ஜூன் 2026 5:39:23 PM (IST)

கோடைகாலத்திலும் தடையின்றி நிறைவான குடிநீர் விநியோகம்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:48:12 PM (IST)

தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் ரூ.6 லட்சம் கல்வி உதவித்தொகை : முன்னாள் மாணவர்கள் வழங்கல்!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:30:21 PM (IST)









