» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாணவியர் சேர்க்கை : மே 29-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்!
ஞாயிறு 10, மே 2026 9:58:52 AM (IST)
சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026-2027-ம் கல்விய ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவியர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.
இக்கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல் (Commerce), வணிக நிர்வாகவியல் (BBA), கணிதவியல், கணினி அறிவியல் ஆகிய இளநிலை (UG) பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:
மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியின் வாயிலாகப் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வரும் மே 29-ம் தேதி கடைசி நாளாகும்.
இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிரமம் இருந்தால், மாணவிகளுக்கு உதவச் சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 'மாணவர் சேர்க்கை உதவி மையம்' (Admission Help Desk) செயல்பட்டு வருகிறது. மாணவிகள் இந்த மையத்தை நேரில் அணுகியும் கூடுதல் விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். இத்தகவலைக் கல்லூரி முதல்வர் (மு.கூ.பொ.) ஜோசப் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குற்றச் செயல்களில் தவெகவிற்குத் தொடர்பில்லை : தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அறிக்கை!
செவ்வாய் 9, ஜூன் 2026 8:23:34 PM (IST)

ஆட்சி அதிகார மமதையில் பெண்களை மிரட்டுவதா? தவெக எம்எல்ஏவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!
செவ்வாய் 9, ஜூன் 2026 5:39:23 PM (IST)

கோடைகாலத்திலும் தடையின்றி நிறைவான குடிநீர் விநியோகம்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:48:12 PM (IST)

தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் ரூ.6 லட்சம் கல்வி உதவித்தொகை : முன்னாள் மாணவர்கள் வழங்கல்!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:30:21 PM (IST)

உணவு ஊட்டசத்து இயல், உடல் எடை சீரமைப்பு பயிற்சிகள் : தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 9, ஜூன் 2026 3:18:01 PM (IST)

வ.உ.சி. துறைமுகத்தின் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் : பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத் கோரிக்கை!
செவ்வாய் 9, ஜூன் 2026 12:34:56 PM (IST)









