» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தடைக்காலத்தால் எகிறும் மீன் விலை : பொதுமக்கள், வியாபாரிகள் குவிந்தனர்!!
ஞாயிறு 10, மே 2026 9:55:39 AM (IST)
தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. இருப்பினும், மீன்பிடி தடைக்காலம் மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக மீன்களின் விலை குறையாமல் உயர்ந்தே காணப்பட்டதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது விசைப்படகுகளுக்கான மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால், நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்குச் சென்று வருகின்றனர். கடந்த சில வாரங்களாகக் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மீன்பாடு குறைவாக இருந்த நிலையில், நேற்று கரை திரும்பிய மீனவர்களின் வலைகளில் பெரிய அளவிலான மீன்கள் அதிகளவில் கிடைத்தன.
மீன்கள் வரத்து அதிகமாக இருந்தபோதிலும், சந்தையில் நிலவும் தட்டுப்பாடு காரணமாகக் கடந்த வாரத்தைப் போன்றே விலையில் மாற்றம் இன்றி உயர்ந்து காணப்பட்டது சீலா மீன் ரூ. 1,300 முதல் ரூ. 1,500 வரை. விளை மீன், ஊழி, பாறை ரூ. 500 முதல் ரூ. 700 வரை. கேரை மீன் (70-80 கிலோ எடை கொண்டவை) ரூ. 270 முதல் ரூ. 300 வரை. நண்டு ரூ. 700 வரை. சாளை மீன் ஒரு கூடை ரூ. 2,500 வரை விற்பனையானது.
கோடை விடுமுறை என்பதால் மீன்களை வாங்குவதற்காகத் திரேஸ்புரம் துறைமுகத்தில் அதிகாலையிலேயே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகளவில் திரண்டனர். வரத்து அதிகமாக இருந்தும், போட்டி போட்டுக்கொண்டு மக்கள் மீன்களை வாங்கிச் சென்றதால் மீனவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல மீன்பாடும், அதே வேளையில் கூடுதல் லாபமும் கிடைத்துள்ளதால் தூத்துக்குடி நாட்டுப்படகு மீனவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆட்சி அதிகார மமதையில் பெண்களை மிரட்டுவதா? தவெக எம்எல்ஏவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!
செவ்வாய் 9, ஜூன் 2026 5:39:23 PM (IST)

கோடைகாலத்திலும் தடையின்றி நிறைவான குடிநீர் விநியோகம்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:48:12 PM (IST)

தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் ரூ.6 லட்சம் கல்வி உதவித்தொகை : முன்னாள் மாணவர்கள் வழங்கல்!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:30:21 PM (IST)

உணவு ஊட்டசத்து இயல், உடல் எடை சீரமைப்பு பயிற்சிகள் : தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 9, ஜூன் 2026 3:18:01 PM (IST)

வ.உ.சி. துறைமுகத்தின் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் : பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத் கோரிக்கை!
செவ்வாய் 9, ஜூன் 2026 12:34:56 PM (IST)

தூத்துக்குடியில் மெகா கப்பல் கட்டும் தளம் : தென் கொரியாவில் அமைச்சர் கீர்த்தனா ஆலோசனை!
செவ்வாய் 9, ஜூன் 2026 12:08:09 PM (IST)









