» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கார் வாங்கித் தர தந்தை மறுப்பு: வாலிபர் தற்கொலை!
வியாழன் 7, மே 2026 11:49:04 AM (IST)
திருச்செந்தூர் அருகே தந்தை கார் வாங்கித் தர மறுத்துத் திட்டியதால், மன உளைச்சலில் இருந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி, கஸ்பா புதுத்தெருவைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரது மகன் பவித் குமார் (28). இவர் சென்னையில் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான பரமன்குறிச்சிக்கு வந்துள்ளார்.
ஊருக்கு வந்த பவித் குமார், தனக்குச் சொந்தமாக ஒரு கார் வாங்கித் தருமாறு தனது தந்தையிடம் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு அவரது தந்தை மறுப்புத் தெரிவித்ததுடன், அவரைத் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பவித் குமார், தனது வீட்டின் உள்ளே மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து வந்த திருச்செந்தூர் போலீசார், உயிரிழந்த வாலிபரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாகத் திருச்செந்தூர் உதவி ஆய்வாளர் காந்திமதி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக முதல்வர் விஜய்க்கு அரசு காஜி வாழ்த்து!
புதன் 13, மே 2026 12:42:45 PM (IST)

பணம் வைத்துச் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது!
புதன் 13, மே 2026 11:09:22 AM (IST)

எதையும் தாங்கும் இதயமே மீண்டு வா: இபிஎஸ் ஆதரவாக தூத்துக்குடியில் பரபரப்பு போஸ்டர்கள்!
புதன் 13, மே 2026 9:00:17 AM (IST)

லாரிகள் மோதி கோர விபத்து: டிரைவர் படுகாயம்!
புதன் 13, மே 2026 8:54:07 AM (IST)

தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய டாஸ்மாக் கடை மூடல் - பொதுமக்கள் வரவேற்பு!
புதன் 13, மே 2026 8:49:21 AM (IST)

மனைவி பிரிந்து சென்றதால் விபரீத முடிவு: ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை!
புதன் 13, மே 2026 8:46:09 AM (IST)










