» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாயமான நபர் சுடுகாட்டில் சடலமாக மீட்பு!
வியாழன் 7, மே 2026 11:44:14 AM (IST)
கோவில்பட்டியில் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த 55வயது நபர் சுடுகாட்டுப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திரா நகர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டியராஜன் மகன் ராஜேந்திரன் (55). ராஜேந்திரன் கடந்த மே 1-ஆம் தேதி முதல் திடீரெனக் காணாமல் போனார். இது குறித்துக் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, போலீஸார் வழக்கப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று அத்தை கொண்டான் சுடுகாட்டுப் பகுதியில் ராஜேந்திரன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி மேற்கு போலீஸார், ராஜேந்திரனின் உடலை மீட்டுத் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக முதல்வர் விஜய்க்கு அரசு காஜி வாழ்த்து!
புதன் 13, மே 2026 12:42:45 PM (IST)

பணம் வைத்துச் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது!
புதன் 13, மே 2026 11:09:22 AM (IST)

எதையும் தாங்கும் இதயமே மீண்டு வா: இபிஎஸ் ஆதரவாக தூத்துக்குடியில் பரபரப்பு போஸ்டர்கள்!
புதன் 13, மே 2026 9:00:17 AM (IST)

லாரிகள் மோதி கோர விபத்து: டிரைவர் படுகாயம்!
புதன் 13, மே 2026 8:54:07 AM (IST)

தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய டாஸ்மாக் கடை மூடல் - பொதுமக்கள் வரவேற்பு!
புதன் 13, மே 2026 8:49:21 AM (IST)

மனைவி பிரிந்து சென்றதால் விபரீத முடிவு: ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை!
புதன் 13, மே 2026 8:46:09 AM (IST)










