» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த ஓட்டுநர் உயிரிழப்பு!
புதன் 6, மே 2026 8:48:47 AM (IST)
கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டியில் வீட்டின் படிக்கட்டில் ஏறியபோது நிலைதடுமாறி கீழே விழுந்த ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் முத்துக்குமார் (41). இவர் விருதுநகர் மாவட்டம் நள்ளியில் உள்ள தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார்.
கடந்த திங்கள்கிழமை அன்று தனது வீட்டிற்கு வந்திருந்த முத்துக்குமார், இரவு நேரத்தில் வீட்டின் மாடிக்குச் செல்வதற்காகப் படிக்கட்டில் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகப் படிக்கட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு உடனடியாகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் முத்துக்குமாரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக முதல்வர் விஜய்க்கு அரசு காஜி வாழ்த்து!
புதன் 13, மே 2026 12:42:45 PM (IST)

பணம் வைத்துச் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது!
புதன் 13, மே 2026 11:09:22 AM (IST)

எதையும் தாங்கும் இதயமே மீண்டு வா: இபிஎஸ் ஆதரவாக தூத்துக்குடியில் பரபரப்பு போஸ்டர்கள்!
புதன் 13, மே 2026 9:00:17 AM (IST)

லாரிகள் மோதி கோர விபத்து: டிரைவர் படுகாயம்!
புதன் 13, மே 2026 8:54:07 AM (IST)

தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய டாஸ்மாக் கடை மூடல் - பொதுமக்கள் வரவேற்பு!
புதன் 13, மே 2026 8:49:21 AM (IST)

மனைவி பிரிந்து சென்றதால் விபரீத முடிவு: ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை!
புதன் 13, மே 2026 8:46:09 AM (IST)










