» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசுப் பேருந்தில் சோகம்: பயணி திடீர் உயிரிழப்பு!

புதன் 6, மே 2026 8:12:25 AM (IST)

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சென்னையில் இருந்து கன்னியாகுமரி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் பயணித்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு புத்தேரியைச் சேர்ந்த ஏசு நசரேன் (59) என்பவர், கடந்த திங்கள்கிழமை சென்னையில் இருந்து அரசுப் பேருந்து மூலம் தனது ஊருக்குப் புறப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வில்லிசேரி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ஏசு நசரேன் எதிர்பாராத விதமாகத் திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக கயத்தாறு அருகே உள்ள சுங்கச் சாவடியில் பேருந்து நிறுத்தப்பட்டது. அங்கிருந்த தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory