» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் ஜி. சரவணன் வெற்றி
திங்கள் 4, மே 2026 4:32:09 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் ஜி. சரவணன், 1,186 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் இறுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் ஜி. சரவணன் வெற்றி பெற்றுள்ளார். கடும் போட்டி நிலவிய இந்தத் தொகுதியில், மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார்.
இறுதி வாக்கு விவரம்:
ஜி. சரவணன் த.வெ.க. 58,814
எஸ்.பி. சண்முகநாதன் அதிமுக 57,628
எஸ். ஊர்வசி அமிர்தராஜ் காங்கிரஸ் 41,277
எஸ். சண்முகசுந்தரம் நாம் தமிழர் 13,153
த.வெ.க. வேட்பாளர் ஜி. சரவணன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ்.பி. சண்முகநாதனை விட 1,186 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக முதல்வர் விஜய்க்கு அரசு காஜி வாழ்த்து!
புதன் 13, மே 2026 12:42:45 PM (IST)

பணம் வைத்துச் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது!
புதன் 13, மே 2026 11:09:22 AM (IST)

எதையும் தாங்கும் இதயமே மீண்டு வா: இபிஎஸ் ஆதரவாக தூத்துக்குடியில் பரபரப்பு போஸ்டர்கள்!
புதன் 13, மே 2026 9:00:17 AM (IST)

லாரிகள் மோதி கோர விபத்து: டிரைவர் படுகாயம்!
புதன் 13, மே 2026 8:54:07 AM (IST)

தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய டாஸ்மாக் கடை மூடல் - பொதுமக்கள் வரவேற்பு!
புதன் 13, மே 2026 8:49:21 AM (IST)

மனைவி பிரிந்து சென்றதால் விபரீத முடிவு: ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை!
புதன் 13, மே 2026 8:46:09 AM (IST)










