» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் டயர் வெடித்து மின் கம்பத்தில் கார் மோதி விபத்து – 4 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 7:53:41 PM (IST)

தூத்துக்குடியில் கார் டயர் வெடித்து மின் கம்பத்தில் மோதிய விபத்தில் திருச்சியைச் சேர்ந்த 4 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.
திருச்சி ஏர்போர்ட் பசுமணி நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் அசோக் குமார் (37). இவர் தனது குடும்பத்தினர் நான்கு பேருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சாமி கும்பிட வந்துள்ளார். சாமி தரிசனத்தை முடித்துவிட்டு, மீண்டும் திருச்சிக்குச் செல்வதற்காகத் தூத்துக்குடி வழியாகக் காரில் சென்று கொண்டிருந்தனர்.
தூத்துக்குடி - திருச்செந்தூர் பிரதான சாலையில், முத்தையாபுரம் அருகே உள்ள லாரிகள் எடை போடும் நிலையம் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே இருந்த மின் கம்பத்தில் பலமாக மோதியது. மோதிய வேகத்தில் மின் கம்பம் அடியோடு சாய்ந்து காரின் மீது விழுந்தது.
இருப்பினும், காரில் இருந்த 4பேரும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மின் கம்பம் சாய்ந்ததால் அப்பகுதியில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த மின்வாரிய அதிகாரிகள், உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்துச் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பணம் வைத்துச் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது!
புதன் 13, மே 2026 11:09:22 AM (IST)

எதையும் தாங்கும் இதயமே மீண்டு வா: இபிஎஸ் ஆதரவாக தூத்துக்குடியில் பரபரப்பு போஸ்டர்கள்!
புதன் 13, மே 2026 9:00:17 AM (IST)

லாரிகள் மோதி கோர விபத்து: டிரைவர் படுகாயம்!
புதன் 13, மே 2026 8:54:07 AM (IST)

தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய டாஸ்மாக் கடை மூடல் - பொதுமக்கள் வரவேற்பு!
புதன் 13, மே 2026 8:49:21 AM (IST)

மனைவி பிரிந்து சென்றதால் விபரீத முடிவு: ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை!
புதன் 13, மே 2026 8:46:09 AM (IST)

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5லட்சம் மதிப்புள்ள சோப்புகள் பறிமுதல்: தூத்துக்குடியில் பரபரப்பு!
புதன் 13, மே 2026 8:25:31 AM (IST)











Babuமே 1, 2026 - 08:27:20 AM | Posted IP 162.1*****