» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சட்டவிரோத புகையிலை விற்பனை: 3 பேர் கைது
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:31:01 PM (IST)

விளாத்திகுளம் அருகே சட்டவிரோத விற்பனைக்காக 105 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விருசம்பட்டி பகுதியில் சட்டவிரோத புகையிலை விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், உதவி ஆய்வாளர் நாராயணன் தலைமையிலான போலீசார் இன்று (17.04.2026) அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த மூன்று நபர்களைப் பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்களான மாரிமுத்து (38), ராஜ் (28) மற்றும் குளத்துரைச் சேர்ந்த சுரேந்திரன் (32) ஆகியோர் என்பதும் அவர்கள் சட்டவிரோத விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனடியாக போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த சுமார் 105 கிலோ 650 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்கம் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
திங்கள் 11, மே 2026 7:44:20 PM (IST)

மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் விஷு மகாஜன் வழங்கினார்!
திங்கள் 11, மே 2026 5:43:31 PM (IST)

மனித உரிமைகள் குறித்த குறும்படப் போட்டி: ரூ.2 லட்சம் வரை பரிசு! - விண்ணப்பங்கள் வரவேற்பு!
திங்கள் 11, மே 2026 5:06:43 PM (IST)

மாணவர்களுக்கான இலவசத் திறன் மேம்பாட்டு முகாம் : ஆட்சியர் தொடங்கி விஷு மகாஜன் வைத்தார்!
திங்கள் 11, மே 2026 4:22:57 PM (IST)

தூத்துக்குடியில் மின் கம்பத்தில் கார் மோதி விபத்து : வாலிபர் பலி; நண்பர்கள் மூவர் படுகாயம்!
திங்கள் 11, மே 2026 4:11:51 PM (IST)

மது விற்பனையில் ஆதார், கைரேகை கட்டாயம் : புதிய முறையை அமல்படுத்தக் கோரிக்கை!
திங்கள் 11, மே 2026 4:02:10 PM (IST)










