» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருமணமான 8 மாதத்தில் இளைஞர் தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை!
சனி 11, ஏப்ரல் 2026 4:30:17 PM (IST)
தூத்துக்குடி அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் கடற்கரைச் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் லாரன்ஸ் மகன் ஷால்வின் (23). கடல் தொழில் செய்து வந்த இவருக்கு, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சானியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கடல் தொழிலுக்காகச் சென்றிருந்த ஷால்வின், ஒரு மாதத்திற்குப் பிறகு நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது அவரது மனைவி சானியா ராமேஸ்வரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்துள்ளார். சானியாவை உடனடியாக வீட்டிற்கு வருமாறு ஷால்வின் அழைத்துள்ளார். ஆனால், அவர் வர தாமதமாகும் என்று கூறியதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஷால்வின், மது போதையில் வீட்டின் உட்புறம் உள்ள மரக்கட்டையில் சுடிதார் சால்வையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை இது குறித்துத் தகவல் அறிந்த தருவைகுளம் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றினர். திருமணமாகி 8 மாதங்களே ஆவதால், இந்தத் தற்கொலை குறித்து வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணை நடத்தப்பட வாய்ப்புள்ளது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்கம் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
திங்கள் 11, மே 2026 7:44:20 PM (IST)

மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் விஷு மகாஜன் வழங்கினார்!
திங்கள் 11, மே 2026 5:43:31 PM (IST)

மனித உரிமைகள் குறித்த குறும்படப் போட்டி: ரூ.2 லட்சம் வரை பரிசு! - விண்ணப்பங்கள் வரவேற்பு!
திங்கள் 11, மே 2026 5:06:43 PM (IST)

மாணவர்களுக்கான இலவசத் திறன் மேம்பாட்டு முகாம் : ஆட்சியர் தொடங்கி விஷு மகாஜன் வைத்தார்!
திங்கள் 11, மே 2026 4:22:57 PM (IST)

தூத்துக்குடியில் மின் கம்பத்தில் கார் மோதி விபத்து : வாலிபர் பலி; நண்பர்கள் மூவர் படுகாயம்!
திங்கள் 11, மே 2026 4:11:51 PM (IST)

மது விற்பனையில் ஆதார், கைரேகை கட்டாயம் : புதிய முறையை அமல்படுத்தக் கோரிக்கை!
திங்கள் 11, மே 2026 4:02:10 PM (IST)










