» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முத்தாலங்குறிச்சி காமராஜ்-க்கு சமூக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தலைமைத்துவ விருது: ஆட்சியர் வழங்கினார்!

செவ்வாய் 3, மார்ச் 2026 8:37:02 PM (IST)



எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி எஸ்.காமராஜ்-க்கு 2025-26 ஆம் ஆண்டிற்கான சமூக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தலைமைத்துவ விருதினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (03.03.2026), தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக முத்தாலங்குறிச்சி எஸ்.காமராஜ் என்பவருக்கு 2025-26 ஆம் ஆண்டிற்கான சமூக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தலைமைத்துவ விருதினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார். 

சமூக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தலைமைத்துவ விருது வழங்கும்பொருட்டு, மாநில அளவில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மாநிலத் தேர்வுக்குழுவால் பரிசீலிக்கப்பட்டு, மாவட்ட வாரியாக விருது பெறுநர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக (KMTR) திருநெல்வேலி மண்டலத்தைச் சேர்ந்த தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக முத்தாலங்குறிச்சி எஸ்.காமராஜ் 2025 - 26 ஆம் ஆண்டிற்கான சமூக பாதுகாப்பு தலைமைத்துவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார். 

இவ்விருதின் கீழ் ரூ.25,000 ரொக்கமாகவும், பாராட்டுச் சான்றிதழும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், அவர்களால் அவருக்கு வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களின் நிலையான பயன்பாட்டை உறுதி செய்ய சமூக முன்னோடிகள் மேற்கொண்டு வரும் சேவைகளை பாராட்டும் நோக்கில் தமிழக அரசு ஆண்டுதோறும் இந்த விருதை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா, உடனிருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory