» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரிஷியன் பலி: போலீஸ் விசாரணை!
திங்கள் 2, மார்ச் 2026 10:55:05 AM (IST)
தூத்துக்குடியில் மின் கம்பத்தில் ஏறி, மின் தடையைச் சரி செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி எலக்ட்ரிஷியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி அண்ணா நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் சாமுவேல் (25). எலக்ட்ரிஷியனாக வேலை செய்து வந்த இவரது வீட்டில், நேற்று இரவு திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை சுமார் ஒரு மணி அளவில், தனது வீட்டின் முன்னே உள்ள மின் கம்பத்தில் பழுது ஏற்பட்டிருக்கலாம் என எண்ணிய சாமுவேல், அதனைச் சரி செய்ய மின் கம்பத்தில் ஏறியுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில், நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன், விரைந்து வந்து உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாமிரபரணி நதிக்கரை கொலைகளின் கூடாரம் : திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு
வெள்ளி 6, மார்ச் 2026 8:57:36 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்!
வெள்ளி 6, மார்ச் 2026 8:39:00 PM (IST)

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:34:10 PM (IST)

தூத்துக்குடியில் சாரண, சாரணியர் சிந்தனை நாள் விழா: 15 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:06:07 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கித் தேர்வில் வெற்றி பெற கல்லூரி மாணவர்கள் சிறப்புப் பிரார்த்தனை!
வெள்ளி 6, மார்ச் 2026 4:43:53 PM (IST)

தூத்துக்குடியில் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விபத்து; அதிகாரிகளின் அலட்சியம்: பாஜக கண்டனம்
வெள்ளி 6, மார்ச் 2026 4:30:10 PM (IST)