» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத்தில் புதிய பயணியர் நிழற்குடை, ஐ லவ் நாசரேத் செல்ஃபி பாயிண்ட் திறப்பு விழா
சனி 14, பிப்ரவரி 2026 8:39:39 PM (IST)

நாசரேத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை மற்றும் ஐ லவ் நாசரேத் என்ற வாசகம் அடங்கிய செல்ஃபி பாயிண்ட் ஆகியவற்றை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
நாசரேத் தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி முன் பகுதியில் மெயின் ரோட்டில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி பங்களிப்பு மற்றும் பேரூராட்சி பொது நிதியில் இருந்து புதிதாக பயணியர் நிழற்குடை, பேவர் பிளாக் நடை பாதை மற்றும் பளிங்கு கற்களின் மேலே அமைக்கப்பட்ட ஐ லவ் நாசரேத் என்ற வாசகம் அடங்கிய செல்ஃபி பாயிண்ட் ஆகியவை அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. கவுதம் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவி நிர்மலா ரவி அனைவரையும் வரவேற்றார். பேரூராட்சி செயல் அலுவலர் திருமலைக்குமார், துணை தலைவர் அருண் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தமிழக மீன் வளம் _ மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை மற்றும் ஐ லவ் நாசரேத் என்ற வாசகம் அடங்கிய செல்ஃபி பாயிண்ட் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
இந் நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும், ஆழ்வார்திருநகரி யூனியன் முன்னாள் சேர்மனுமான ஜனகர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், ஆழ்வார் திருநகரி மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார், மாவட்ட தொண்டர் அணி தலைவர் சுடலைமுத்து, துணை தலைவர் கார்த்தீசன், நாசரேத் தி.மு.க. நகர செயலாளர் ஜமீன் சாலமோன், பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் ரவி செல்வகுமார், மாமல்லன், மாவட்ட பிரதிநிதிகள் அலெக்ஸ் புருட்டோ, தாமரைசெல்வன், மாவட்ட தகவல் தொழிற்நுட்ப அணி அமைப்பாளர் பேரின்பராஜ், பேரூராட்சி கவுன்சிலர்கள் எட்வர்ட் கண்ணப்பா, ஜேம்ஸ், பத்திரகாளி, சாமுவேல், அதிசயமணி, ஜெயா, ஸ்டெல்லா, நகர தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ஜெரின், நகர மாணவர் அணி துணை அமைப்பாளர் சக்திகுமார், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் செல்லத்துரை, நகர பிரதிநிதி ஜோசப், தூத்துக்குடி தெற்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ரஞ்சன், ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, நாசரேத் நகர ம.தி.மு.க. செயலாளர் ராபர்ட், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பாபுசெல்வன், பொதுக்குழு உறுப்பினர் மோகன்சிங், நாசரேத் கிராம நிர்வாக அலுவலர் சிவராமன், பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் ராஜேந்திரன் மற்றும் தி.மு.க. கட்சி தொண்டர்கள், பேரூராட்சி ஊழியர்கள்,பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் : மீன்வளத்துறை எச்சரிக்கை!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 7:57:23 PM (IST)

தெருக்களில் தவித்த ஆதரவற்றோர் மீட்பு: சிகிச்சை முடிந்து முதியோர் இல்லத்தில் அனுமதி!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 7:52:36 PM (IST)

குரூப் 2 தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் : தூத்துக்குடியில் ஆக.24ஆம் தேதி தொடங்குகிறது!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 5:49:25 PM (IST)

செந்தூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் நவீன LHB பெட்டிகளுடன் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 5:18:56 PM (IST)

25 வருட பழைய பைப் லைனால் தொடரும் குடிநீர் தட்டுப்பாடு - குமாரபுரம் மக்கள் போராட்டம்!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 5:06:08 PM (IST)

தம்ம சக்கர பரிவர்தன திருவிழா மானியம் வழங்கும் திட்டம் - விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 4:51:14 PM (IST)









