» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அதிமுக போட்டி: முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பேட்டி
சனி 14, பிப்ரவரி 2026 8:33:04 PM (IST)

2026 சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் அதிமுக நேரடிப் போட்டியிடும் என்று முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கூறினார்.
தூத்துக்குடி டூவிபுரம் 5-வது தெருவில் அதிமுக மாநில வர்த்தக அணி அலுவலகத்தை அக்கட்சியின் மாநில வர்த்தக அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் இன்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது : கடந்த 2021 தேர்தலில் தூத்துக்குடி தொகுதி கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
ஆனால், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் ஆசியுடன் தூத்துக்குடி தொகுதியில் அதிமுக நேரடியாகப் போட்டியிடும். வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். தூத்துக்குடி மீனவர் பகுதிகளில் 'தூண்டில் வளைவு' திட்டப் பணிகள் திமுக ஆட்சியில் பாதியிலேயே நிற்கின்றன. இதற்கான நிதி எங்கே போனது என்று தெரியவில்லை. இதனால் படகுகள் சேதமடைந்து மீனவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
"சொன்னதைச் செய்வோம்" என்ற திமுக, வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. அதிமுக தலைவர்களைப் பற்றிப் பேசும் விஜய், மேடைக்கு மேடை மாற்றிப் பேசுகிறார். அவர் சினிமாவில் வேண்டுமானால் 10 பேரை அடிக்கலாம், ஆனால் அரசியலில் அது எடுபடாது. "வான்கோழி ஒருபோதும் மயிலாக முடியாது." மக்கள் அவரை ஒரு நடிகராகப் பார்க்கவே கூடுகிறார்களே தவிர, அரசியல் தலைவராக அல்ல என்றார்.
இந்நிகழ்வில் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் ஆர்.எல். ராஜா, முன்னாள் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் சின்னத்துரை, மற்றும் கட்சி நிர்வாகிகள் கே.டி.சி. சங்கர், ஐயப்பன், ராதா ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாமிரபரணி நதிக்கரை கொலைகளின் கூடாரம் : திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு
வெள்ளி 6, மார்ச் 2026 8:57:36 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்!
வெள்ளி 6, மார்ச் 2026 8:39:00 PM (IST)

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:34:10 PM (IST)

தூத்துக்குடியில் சாரண, சாரணியர் சிந்தனை நாள் விழா: 15 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:06:07 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கித் தேர்வில் வெற்றி பெற கல்லூரி மாணவர்கள் சிறப்புப் பிரார்த்தனை!
வெள்ளி 6, மார்ச் 2026 4:43:53 PM (IST)

தூத்துக்குடியில் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விபத்து; அதிகாரிகளின் அலட்சியம்: பாஜக கண்டனம்
வெள்ளி 6, மார்ச் 2026 4:30:10 PM (IST)









