» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மின்மாற்றியை இடமாற்றம் செய்ய வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை!
சனி 14, பிப்ரவரி 2026 8:27:04 PM (IST)

தூத்துக்குடி கீழ ரத வீதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மின்மாற்றியை பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்து முன்னணியின் தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்துக்குமார், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கீழ ரத வீதியைச் சுற்றிப் புகழ்பெற்ற சிவன் கோயில் மற்றும் தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல ஆலயங்கள் உள்ளன. சித்திரைத் தேரோட்டத்தின் போது ஆயிரக்கணக்கான மக்கள் இப்பகுதியில் திரண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். அந்த நேரத்தில் மின்மாற்றி இருப்பது பக்தர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும்.
இப்பகுதியில் விஜஎஸ் மற்றும் சிஎம் போன்ற முக்கியப் பள்ளிகள் அமைந்துள்ளதால், ஆயிரக்கணக்கான மாணவர்கள் தினசரி இந்தப் பாதையைத்தான் பயன்படுத்துகின்றனர். இரண்டாம் ரயில்வே கேட் அருகே இப்பகுதி அமைந்துள்ளதால், கேட் மூடப்படும் நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஏற்கனவே குறுகிய சாலையாக இருக்கும் இப்பகுதியில் மின்மாற்றி அமைப்பது விபத்துகளுக்கு வழிவகுக்கும்.
பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலனை முன்னிறுத்தி, இந்த மின்மாற்றியை மக்கள் நடமாட்டம் இல்லாத மாற்று இடத்திற்கு மாற்ற மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாமிரபரணி நதிக்கரை கொலைகளின் கூடாரம் : திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு
வெள்ளி 6, மார்ச் 2026 8:57:36 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்!
வெள்ளி 6, மார்ச் 2026 8:39:00 PM (IST)

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:34:10 PM (IST)

தூத்துக்குடியில் சாரண, சாரணியர் சிந்தனை நாள் விழா: 15 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:06:07 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கித் தேர்வில் வெற்றி பெற கல்லூரி மாணவர்கள் சிறப்புப் பிரார்த்தனை!
வெள்ளி 6, மார்ச் 2026 4:43:53 PM (IST)

தூத்துக்குடியில் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விபத்து; அதிகாரிகளின் அலட்சியம்: பாஜக கண்டனம்
வெள்ளி 6, மார்ச் 2026 4:30:10 PM (IST)









