» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி கணக்கு : உத்திரப்பிரதேச வாலிபர் கைது
வெள்ளி 13, பிப்ரவரி 2026 8:36:56 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் முகப்புப் படமாக (DP) வைத்து, பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட முயன்ற நபரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தைப் பயன்படுத்திப் போலி வாட்ஸ்அப் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் மோசடி நடக்க வாய்ப்புள்ளதாகவும் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் உத்தரவின் பேரில், கூடுதல் கண்காணிப்பாளர் தீபு மேற்பார்வையில், ஆய்வாளர் சாந்தி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தொழில்நுட்ப ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில், உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அனுஜ் குமார் (21) என்பவர் பொதுமக்களிடம் பண மோசடி செய்யும் நோக்கத்தில் ஆட்சியரின் புகைப்படத்தைப் பயன்படுத்திப் போலி கணக்குகளை உருவாக்கியது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, உத்திரப்பிரதேச மாநிலத்திற்குச் சென்ற தனிப்படை போலீசார், கடந்த 09.02.2026 அன்று அனுஜ் குமாரைக் கைது செய்தனர். அவர் நேற்று (12.02.2026) தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளியைக் கைது செய்த சைபர் குற்றப்பிரிவு போலீசாரைக் காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாமிரபரணி நதிக்கரை கொலைகளின் கூடாரம் : திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு
வெள்ளி 6, மார்ச் 2026 8:57:36 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்!
வெள்ளி 6, மார்ச் 2026 8:39:00 PM (IST)

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:34:10 PM (IST)

தூத்துக்குடியில் சாரண, சாரணியர் சிந்தனை நாள் விழா: 15 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:06:07 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கித் தேர்வில் வெற்றி பெற கல்லூரி மாணவர்கள் சிறப்புப் பிரார்த்தனை!
வெள்ளி 6, மார்ச் 2026 4:43:53 PM (IST)

தூத்துக்குடியில் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விபத்து; அதிகாரிகளின் அலட்சியம்: பாஜக கண்டனம்
வெள்ளி 6, மார்ச் 2026 4:30:10 PM (IST)









