» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:18:25 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (பிப்.14) சனிக்கிழமை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவித்துள்ளார்.
பொது விநியோகத் திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பிப்ரவரி-2026 ஆம் மாதத்திற்கான சிறப்பு முகாம் 14.02.2026 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
இந்த முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் முகாமில் சரிசெய்து வழங்கப்பட உள்ளது.
மேலும், மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் இம்முகாமில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில், குறைகள் இருப்பின் மனு செய்து பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாமிரபரணி நதிக்கரை கொலைகளின் கூடாரம் : திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு
வெள்ளி 6, மார்ச் 2026 8:57:36 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்!
வெள்ளி 6, மார்ச் 2026 8:39:00 PM (IST)

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:34:10 PM (IST)

தூத்துக்குடியில் சாரண, சாரணியர் சிந்தனை நாள் விழா: 15 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:06:07 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கித் தேர்வில் வெற்றி பெற கல்லூரி மாணவர்கள் சிறப்புப் பிரார்த்தனை!
வெள்ளி 6, மார்ச் 2026 4:43:53 PM (IST)

தூத்துக்குடியில் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விபத்து; அதிகாரிகளின் அலட்சியம்: பாஜக கண்டனம்
வெள்ளி 6, மார்ச் 2026 4:30:10 PM (IST)










சண்முகம்Feb 14, 2026 - 08:59:34 AM | Posted IP 172.7*****