» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி தொகுதியில் ரூ. 784 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:12:09 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் ரூ.784 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி 42-வது வார்டுக்கு உட்பட்ட சிவந்தாகுளம் சாலையில், சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடையைச் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று திறந்து வைத்தார்.விழாவில் அவர் பேசுகையில், "கடந்த நான்கரை ஆண்டுகளில் தூத்துக்குடி தொகுதியில் மட்டும் 784 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் வசதி, பூங்காக்கள், நகர் நல மையங்கள் மற்றும் பள்ளிக் கட்டிடங்கள் போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் உரிமைத் தொகை தற்போது பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான நிலுவைத் தொகை மற்றும் கோடைகால சிறப்புத் தொகை என மொத்தம் 5,000 ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. குறிப்பாக, முதியோர்களுக்கு அவர்களது இல்லத்திற்கே சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் 'தாயுமானவன் திட்டம்' மற்றும் தரமான ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடின்றி வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர் சுப்புராஜ், சார்பதிவாளர் அந்தோணி பட்டுராஜ், பெருமாள் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார் மற்றும் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாமிரபரணி நதிக்கரை கொலைகளின் கூடாரம் : திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு
வெள்ளி 6, மார்ச் 2026 8:57:36 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்!
வெள்ளி 6, மார்ச் 2026 8:39:00 PM (IST)

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:34:10 PM (IST)

தூத்துக்குடியில் சாரண, சாரணியர் சிந்தனை நாள் விழா: 15 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:06:07 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கித் தேர்வில் வெற்றி பெற கல்லூரி மாணவர்கள் சிறப்புப் பிரார்த்தனை!
வெள்ளி 6, மார்ச் 2026 4:43:53 PM (IST)

தூத்துக்குடியில் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விபத்து; அதிகாரிகளின் அலட்சியம்: பாஜக கண்டனம்
வெள்ளி 6, மார்ச் 2026 4:30:10 PM (IST)









