» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: 2 பைக்குகள் பறிமுதல்!
வியாழன் 5, பிப்ரவரி 2026 7:53:42 AM (IST)
ஆறுமுகனேரி பகுதியில் கஞ்சா விற்றதாக வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பகுதியில் சிலர் கஞ்சா விற்று வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பேயன்விளை பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி பின்புறம் ஒருவர் மோட்டாா் சைக்கிளில் வைத்து மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த பள்ளி மைதானம் அருகில் மோட்டார் சைக்கிளில் வைத்து கஞ்சா விற்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்தவுடன் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
விசாரணையில், அவர் காயல்பட்டினம் சுலைமான் நகரை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் மகன் அப்துல் சுக்குர் (25) என தெரிந்தது. அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவையும், மோட்டார் ைசக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இவர் மீது ஏற்கனவே ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் 12 வழக்குகளும் எட்டயபுரம், குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து சாகுபுறம் பஸ்நிறுத்தம் அருகில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வைத்து கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக இந்த போலீசார் அந்த பகுதிக்கு சென்றனர். அங்கு மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர், காயல்பட்டினம் மாட்டுக்குளம் 3-வது தெருவை சேர்ந்த மாகின் அபூபக்கர் மகன் முகமது புகாரி(31) என்றும், தற்போது காயல்பட்டினம் மரைக்காயர் பள்ளி தெருவில் வசித்து வருவதாகவும், இந்த பகுதியில் கஞ்சா விற்று வந்ததும் தெரிய வந்தது.
அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அந்த 2பேரையும் போலீசார் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். கோர்ட்டு உத்தரவின் பேரில் 2பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி கணக்கு : உத்திரப்பிரதேச வாலிபர் கைது
வெள்ளி 13, பிப்ரவரி 2026 8:36:56 PM (IST)

கலைத்திருவிழாவில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:42:58 PM (IST)

ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:18:25 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் ரூ. 784 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:12:09 PM (IST)

தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர் மீது தாக்குதல் : காவல் நிலையம் முற்றுகை!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:02:32 PM (IST)

வைகுண்டபதி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 3:55:28 PM (IST)










